Published : 30 Apr 2020 12:07 PM
Last Updated : 30 Apr 2020 12:07 PM
புதுச்சேரியில் வரும் மே 3-ம் தேதிக்குப் பிறகு எவ்வித நிலைப்பாடு எடுப்பது என்பது தொடர்பாக முதல்வர் நாராயணசாமி தலைமையில் நாளை ஆலோசனைக்கூட்டம் நடைபெறும் என, சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் செய்தியாளர்களிடம் இன்று (ஏப்.30) கூறியதாவது:
"புதுச்சேரி ஏனாம் பிராந்தியத்துக்கு நடந்தே வந்த 14 பேரை அனுமதிப்பதில் 4 நாட்களாக பிரச்சினை நிலவியது. அதையடுத்து முதல்வர், உள்துறை செயலரிடம் பேசினார். அதையடுத்து மத்திய அரசின் உத்தரவு மாறியது. நாடு முழுவதும் இதுபோல் பல்வேறு மாநிலங்களில் நடந்தே ஊருக்குத் திரும்ப முடியாமல் இருந்த சூழல் முதல்வர் முயற்சியால் மாறியுள்ளது.
புதுச்சேரியில் மூவர் மட்டுமே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இரு நாட்களில் இந்த எண்ணிக்கை குறையும்.
மக்கள்தொகை அடிப்படையில் புதுச்சேரியிலுள்ள 3.41 லட்சம் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்துப் புதிதாக யாரும் வந்துள்ளார்களா, யாரும் வெளியேறியுள்ளார்களா என்ற ஆய்வு நடைபெறுகிறது.
புதுச்சேரியில் வரும் மே 3-க்குப் பிறகு எவ்வித நிலைப்பாடு எடுப்பது என்பது தொடர்பாக முதல்வர் தலைமையில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. நூறு சதவீதம் ஊரடங்கு விலக்கு இருக்காது. சில கட்டுப்பாடுகள் இருக்கும்".
இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT