Published : 29 Apr 2020 07:40 AM
Last Updated : 29 Apr 2020 07:40 AM
வைரஸ் தொற்றின் வலிமையை அறியாமல் மக்கள் விளையாட் டாக உள்ளனர். அரசின் கட்டுப் பாடுகளை முழுமையாக பின்பற்றி ஒத்துழைப்பு அளித்தால்தான் நோய் பரவலை தடுக்க முடியும் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பல் வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத் தில் பல்வேறு குழுக்களைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் பழினிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், தலைமைச் செயலர் கே.சண்முகம், 12 ஒருங் கிணைப்பு குழுக்களில் உள்ள 40 ஐஏஎஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
ஒருங்கிணைப்புக் குழு அமைக் கப்பட்டதில் இருந்து பல்வேறு பணிகள் சிறப்பாக நடந்து வருகின் றன. ஒவ்வொரு குழுவும் அவர் களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை சிறப்பாக மேற்கொண்டு வருவது மகிழ்ச்சிக்குரியதாகும். களத்தில் இருக்கும் நீங்கள் சந்திக்கும் சிர மங்கள், அரசின் நடவடிக்கை களை துரிதப்படுத்தும் ஆலோ சனைகளை வழங்கலாம்.
காவல்துறையை பொறுத்த வரை, சவாலான பணியை ஏற்று இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். ஆரம்ப கட்டத்தில் அவர்களது பணி சிறப்பாக இருந் தது. தற்போது ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில், ஒரே நபர்களை பணியாற்ற அனுமதிப்பதன் மூலம் அவர்களுக்கு சிரமம், பணிச்சுமை ஏற்படு கிறது. எனவே, சுழற்சி முறையில் ஆட்களை மாற்றி பணியாற்ற அனுமதிக்கலாம். 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலகுவான பணிகளை வழங்க வேண்டும்.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற பெரிய மாநகராட்சி களில் காய்கறி சந்தைகளில்தான் பிரச்சினையே உள்ளது. மக் களுக்கு எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் பின்பற்ற மறுக்கின்ற னர். எல்லாவற்றையும் விளை யாட்டுத்தனமாக நினைக்கின்றனர். நோயின் வலிமை, தீவிரத்தை அவர் கள் புரிந்துகொள்ளவில்லை.
அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெ யின் போன்ற உலக நாடுகளில் மக் கள் கொத்து கொத்தாக இறப்பதை அவர்கள் தொலைக்காட்சிகளில் பார்க்கின்றனர். அந்த நாடுகளில் உள்ள மக்கள் முதலில் விபரீதத்தை உணராமல் போனதால்தான் அதிக உயிர்ப்பலி ஏற்பட்டது. அதன்பிறகு அரசு வகுத்த வழிமுறைகளை பின்பற்றி நடப்பதால் தற்போது இறப்பு குறைந்துள்ளது.
ஆனால், இங்கிருப்பவர்கள் அரசு கூறும் வழி முறைகளை பின்பற்ற மாட்டேன் என்கின்றனர். நமக்கு இது ஆரம்ப கட்டம். ஆரம்ப கட்டத்திலயே தகுந்த நடவடிக்கையை அரசு எடுக்கும் போது பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் நோய் பரவலை எளி தாக தடுக்கலாம். இல்லாவிட்டால் உலக நாடுகளில் தடுக்கப்பட்டு விட்டாலும்கூட, நம் பகுதியில் தடுக்க இயலாத சூழல் ஏற்பட்டு விடும். நோயின் வலி மையை அறிந்து அரசின் கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்ற வேண்டும். காவல் மற்றும் உள்ளாட்சித் துறையினர் வீதிவீதியாக சென்று ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனி சாமி காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்துகிறார். அதன்பின், கரோனா சிகிச்சை மேலாண்மை மற்றும் கட்டுப்படுத் தும் பணிகளுக்காக உருவாக்கப் பட்டுள்ள 19 பேர் கொண்ட மருத் துவ நிபுணர் குழுவுடன் ஆலோ சனை நடத்துகிறார். அப்போது மே 3-ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கை நீட்டிப்பது, சென்னையில் முழு ஊரடங்கை நீட்டிப்பது உள்ளிட் டவை குறித்து முதல்வர் ஆலோசனை நடத்துவார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT