Published : 28 Apr 2020 06:44 PM
Last Updated : 28 Apr 2020 06:44 PM
அவமதிக்கும் காட்சியை நீக்க வேண்டும் என்று 'வரனே அவஷ்யமுண்டு' படக்குழுவினருக்கு விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அனூப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து, தயாரித்த படம் 'வரனே அவஷ்யமுண்டு'. பெரும் வரவேற்பு பெற்ற இந்தப் படத்தில் சுரேஷ் கோபி, ஷோபனா, துல்கர் சல்மான், கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சில நாட்களுக்கு முன்பு இந்தப் படம் டிஜிட்டலில் வெளியானது.
இதில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டிக் காட்சிப்படுத்தியது படக்குழு. இந்த காமெடிக் காட்சிகள் இப்போது இணையத்தில் சர்ச்சையாகியுள்ளது. பலரும் படக்குழுவினரைத் திட்டிப் பதிவுகளை வெளியிட, துல்கர் சல்மான் மன்னிப்பு கோரினார்.
ஆனாலும், படத்தில் அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்தச் சர்ச்சை தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
" 'வரனே அவஷ்யமுண்டு' எனும் மலையாளப் படத்தில் பிரபாகரனை அவமதிக்கும் காட்சி இடம்பெற்றிருப்பது இப்படக் குழுவினரின் இழிபோக்கை வெளிப்படுத்துகிறது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். நடிகர் துல்கர் சல்மான் மன்னிப்பு கேட்டுள்ளார் என்றாலும், அக்காட்சியை உடனடியாக நீக்க வேண்டும்"
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
' வரனே அவஷ்யமுண்டே' என்னும் மலையாள படத்தில் மேதகு பிரபாகரன் அவர்களை அவமதிக்கும் காட்சி இடம்பெற்றிருப்பது இப்படக் குழுவினரின் இழிபோக்கை வெளிப்படுத்துகிறது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். நடிகர் துல்கர்சல்மான் மன்னிப்புக் கேட்டுள்ளார் என்றாலும், அக்காட்சியை உடனடியாக நீக்க வேண்டும் pic.twitter.com/yiIXWlQCKP
— Thol.Thirumavalavan (@thirumaofficial) April 28, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT