Published : 28 Apr 2020 04:36 PM
Last Updated : 28 Apr 2020 04:36 PM
கரோனா பாதிப்பு பேரிடர் காலமாக அறிவிக்கப்பட்டிருப்பதால், முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதன்படி தொழிலதிபர்கள் தொடங்கி பொதுமக்கள் வரையில் பல்வேறு தரப்பினர் நிதி வழங்கி வருகிறார்கள்.
இதேபோல மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சிறு தொழில் அதிபர்கள், பொதுமக்கள், பள்ளிக் குழந்தைகள் போன்றோர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து நிதி வழங்கி வருகிறார்கள்.
இந்த வாரத்தில் மட்டும் கொட்டாம்பட்டி ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் ரூ.1 லட்சம், அகில இந்தியக் கட்டுமான சங்கம் (மதுரை) சார்பில் ரூ.1 லட்சம், திருமங்கலம் பாராமவுன்ட் டெக்ஸ்டைல்ஸ் மில்ஸ் சார்பில் ரூ.15 லட்சம், தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் சார்பில் ரூ.50 ஆயிரம், வடமலையான் மருத்துவமனை சார்பில் ரூ.1 லட்சம், மதுரை அஞ்சலி நல்லெண்ணெய் சார்பில் ரூ.5 லட்சம், மதுரை குஜராத்தி சமாஜ் சார்பில் ரூ.1 லட்சம், அண்ணாநகர் முருகதாஸ் குடும்பத்தினர் ரூ.22 லட்சம், மதுரை மாவட்ட நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம் ரூ.2 லட்சம், ஷாப் மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பில் ரூ.2 லட்சம் வழங்கி இருக்கிறார்கள்.
இதுவரையில் மதுரை மாவட்ட ஆட்சியர் வழியாகப் பெறப்பட்ட நிதி எவ்வளவு என்று ஆட்சியர் அலுவலகத்தில் விசாரித்தபோது, மொத்தமாக 1 கோடியே 73 லட்சத்து 67 ஆயிரத்து 41 ரூபாய் வந்திருப்பதாகவும், அதனை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக் கணக்கில் சேர்த்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT