Published : 27 Apr 2020 04:30 PM
Last Updated : 27 Apr 2020 04:30 PM
கரூர், குளித்தலை அம்மா உணவகங்களில் நாள்தோறும் 5,600 பேர் இலவசமாக உணவருந்துகின்றனர். இலவச உணவுக்காக முதல்கட்டமாக மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
கரூர் உழவர் சந்தை, அரசு மருத்துவக் கல்லூரி பழைய மருத்துவமனை மற்றும் குளித்தலை ஆகிய 3 இடங்களில் செயல்படும் அம்மா உணவகங்களில் கடந்த 23-ம் தேதி முதல் 3 வேளைகளும் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. கரூர் உழவர் சந்தை அம்மா உணவகத்தை ஆய்வு செய்யும் பணி மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தலைமையில் இன்று (ஏப்.27) நடைபெற்றது.
மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அம்மா உணவகத்தில் மக்களுக்கு உணவு வழங்கி, உணவு தயாரித்தல் உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ ம.கீதா ஆகியோருடன் உணவருந்தினார். அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்குவதற்கு முதற்கட்டமாக ரூ.1 லட்சத்தை நகராட்சி ஆணையர் சுதாவிடம் வழங்கினார்.
காவல் கண்காணிப்பாளர் ரா.பாண்டியராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கரூர் நகராட்சியில் 2 அம்மா உணவகங்களில் நாள்தோறும் சுமார் 3,000 பேரும், குளித்தலையில் உள்ள அம்மா உணவகத்தில் நாள்தோறும் சுமார் 2,600 பேரும் உணவருந்துகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT