Published : 27 Apr 2020 07:46 AM
Last Updated : 27 Apr 2020 07:46 AM
‘இந்து தமிழ்’ நாளிதழ் வெளி யான முதல் நாளிலிருந்து வாசிக்கத் தொடங்கிய வாசகர்களைப் பற்றி, நமது முகவர்கள்நினைவுகூரும் பகுதி இது. இன்றுசென்னை திருவொற்றியூர் முக வர் ஜி.கிருஷ்ணன் பேசுகிறார்...
டோல்கேட் பகுதியில் வசிக்கும் வாசகர் பி.எஸ்.பாஸ்கர்குமார்,‘இந்து தமிழ்’ ஆண்டுச் சந்தாவை முதல் ஆளாக செலுத்திவிடுவார். ‘இந்து தமிழ்’ வரப்போவது பற்றி ஆங்கில ‘தி இந்து’வில் அறிவிப்பு வெளியானபோது எவ்வளவு ஆர்வமாக இருந்தாரோ, அந்த ஆர்வம் இன்றும் துளிகூட குறையவில்லை அவருக்கு.
காலையில் பேப்பர் எப்போது வரும் என்று வழிமேல் விழிவைத்துக் காத்திருப்பார். “ஏன் சார் இவ்வளவு ஆர்வம்?” என்று ஒருமுறைகேட்டபோது, ‘‘சென்னை துறைமுகத்தில் கண்காணிப்பாளராக வும், யூனியன் நிர்வாகியாகவும் இருப்பதால் பத்திரிகை வாசிப்புஎனக்கு ரொம்ப ரொம்ப அவசி யமாக இருக்கிறது. ஏதாவது கூட்டம், கலந்துரையாடல் என்றால் ‘குமார் சார் பெரிய பெரிய விஷயங்களை எல்லாம், சமூகஅக்கறையோடு பேசுவார்’ என்றுஎல்லோரும் சொல்வார்கள். அதெல்லாம் இந்து தமிழிலிருந்துநான் கற்றுக்கொண்டதுதான்.
ஆண்டுதோறும் உடனுக் குடன் தலைப்பு கொடுத்து ஒருநிமிட பேச்சுப்போட்டி நடத்துவார்கள். ஒருமுறை ‘அருவி’ என்ற தலைப்பு கொடுக்கப்பட்டதும், குற்றாலம், ஐந்தருவி என்றெல் லாம் பேசாமல், காஷ்மீரின் லடாக் கில் ஒருவர் அருவித் தண்ணீரை அரசாங்க உதவியில்லாமல் தனி ஆளாக வாய்க்கால் வெட்டி 40 கிலோ மீட்டருக்குக் கொண்டு சென்று ஒரு கிராமத்துக்கே விவசாயத்துக்கு தண்ணீர் கொடுத்த ‘இந்து தமிழ்’ செய்தியைச் சொன் னேன். அவ்வளவு பாராட்டு.
மருத்துவர் கணேசன் எழுது கிற கட்டுரைகள் எல்லாம் என்னவோ எனக்கும், என் குடும்பத்தினருக்குமாகவே எழுதுவது போலவே தோன்றும். அப்படித்தான் இந்து தமிழின் ஒவ்வொரு கட்டுரையும்” என்று புகழ்ந்து தள்ளிவிட்டார். அதேபோல, “நம்மபேப்பரை குக்கிராமங்கள் வரைக்கும் கொண்டுபோய் சேர்க்கணும்”என்றும் உரிமையோடு சொல்வார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT