Published : 25 Apr 2020 03:13 PM
Last Updated : 25 Apr 2020 03:13 PM
கரோனா நோய் தடுக்கும் பணியில் தமிழகம் முன்மாதிரியாக செயல்படுகிறது என அமைச்சர் ஆர்பி.உதயகுமார் தெரிவித்தார்.
மதுரை பத்திரிகையாளர்கள் சங்கத்தில் பத்திரிகையாளர்களுக்கு கரோனா தடுப்புக்கான முகக்கவசம், சானிடைசர்களை அமைச்சர் வழங்கினார்.
பின்னர் அவர் பேசும்போது, " முதல், இரண்டாம் உலகப்போரை படித்திருக்கிறோம். பேரிடர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் கரோனா வைரஸ் தொற்று இதுவரை யாரும் அறிந்திடாத, பார்த்திடாத ஒன்று. இதைத் தடுக்க. அனைவரும் இயங்கி கொண்டிருக்கிறோம். இதைத் தடுக்கும் முறை குறித்து உலக சுகாதார நிறுவனம், மத்திய சுகதாரத் துறையும் ஆய்வு செய்கிறது.
மதுரை பத்திரிகையாளர்கள் இது போன்ற பேரிடர் காலத்தில் சிரம்மப்பட்டு செய்திகளை சேகரித்து, மக்களிடம் சேர்க்கிறீர்கள்.
கரோனா தொற்று எந்த வடிவில், எப்படி வரும் என்பது தெரியாத நிலையிலும், மக்கள் சேவையில் உயிரைப் பணையம் வைத்து பணிபுரிகிறீர்கள். உங்களின் பணி எங்களுக்கு உற்சாகத்தை கொடுக்கிறது.
இந்த நேரத்தில் மதுரை மாவட்ட நிர்வாகத்தின் பணியை பிற மாவட்டங்களும், மாநகராட்சியின் பணியை சென்னை மாநகராட்சியும் பாராட்டுகிறது. வருவாய், உள்ளாட்சித்துறை, பொது விநியோகம், நெல் கொள்முதல் போன்ற அனைத்துப் பணிகளும் சிறப்பாக செயல்படுகின்றன.
வல்லரசு நாடுகளை ஒப்பிடும்போது, நமது நாட்டில் நோய்த் தொற்று குறைவு. த
கரோனா நோய் தடுக்கும் பணியில் தமிழகத்தில் முதல்வர் தலைமையிலான குழு மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகவும், உலகத்திற்கே இந்தியா முன்னுதாரணமாகவும் செயல்படுகிறது.
அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளுக்கு இந்தியாவில் இருந்தே கரோனா நோய் சிகிச்சைக்கான மருந்துகள் செல்கின்றன.
மதுரை மாவட்டத்தை நெல் களஞ்சியமாக மாற்ற ஆட்சியர் டிஜி.வினய் செயல்படுகிறார்.
உணவு பொருட்களை எந்த நேரத்திலும் அரசு கொள்முதல் செய்யத் தயாராக உள்ளது. எந்த சூழலிலும் பணியாற்றும் மதுரை பத்திரிகையாளர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT