Published : 24 Apr 2020 07:27 AM
Last Updated : 24 Apr 2020 07:27 AM
திரைப்படத் துறை நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்ட 39 சங்கங் களைச் சேர்ந்த 21 ஆயிரத்து 679 உறுப்பினர்களுக்கு தலா ரூ.1,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பு:
திரைப்படத் துறையினர் நலவாரியத்தில் பதிவுபெற்ற 39 சங்கங்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. கரோனா வைரஸால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள திரைப்படத் துறை நலவாரியத் தைச் சேர்ந்த 21 ஆயிரத்து 679 உறுப்பினர்களுக்கு தலா ரூ.1,000 கரோனா நிவாரண நிதி வழங்க முதல்வர் பழனிசாமி கடந்த 9-ம்
தேதி உத்தரவிட்டார். அதன்படி கடந்த 13-ம் தேதி, ரூ.2 கோடியே 16 லட்சத்து 79 ஆயிரம் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, 21 ஆயி ரத்து 679 உறுப்பினர்களில் நேற்று வரை 7 ஆயிரத்து 489 உறுப்பினர் களுக்கு தலா ரூ.1,000 வீதம் ரூ.74
லட்சத்து 89 ஆயிரம் வழங்கப்பட் டுள்ளது. தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந் திய சினி, டெலிவிஷன் ஆர்ட்டிஸ்ட்
மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் யூனியன், திரைப்பட இசைக்கலைஞர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தயாரிப்பு நிர்வாகிகள் சங்கம்
உள்ளிட்ட சங்கங்களைச் சேர்ந்த திரைப்பட நலவாரிய உறுப்பினர் களுக்கு அவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக நிதி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், திரைப்படத் துறை நலவாரிய உறுப்பினர்களாகப் பதிவு செய்து நிவாரண நிதி கிடைக்கப் பெறாதவர்கள், தங்கள் சங்கம் வாயிலாகவோ அல்லது கலைவாணர் அரங்க வளாகத்தில் உள்ள திரைப்படத் துறையினர் நலவாரிய அலுவலகத் தையோ தொடர்பு கொண்டு, ‘cinewelfare@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT