Published : 23 Apr 2020 06:30 PM
Last Updated : 23 Apr 2020 06:30 PM
ஊரடங்கு சமயத்தில் விவசாயிகளுக்குக் காவல்துறையினரால் இடர்ப்பாடுகள் ஏற்படாவண்ணம் தடுக்க திருச்சி காவல் சரகத்தில் சிறப்பு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இது போல தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் காவல்துறை சார்பில் பொறுப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப் பட்டது.
காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வி.இளங்கீரன் தமிழக காவல்துறை தலைவருக்கு மின்னஞ்சல் வழியாக விடுத்திருந்த இந்த கோரிக்கை குறித்து நேற்று இந்து தமிழ்திசை இணையதளத்தில் செய்தி வெளியாகியிருந்தது.
இதனையடுத்து, உடனடியாகச் செயல்பட்ட தமிழக காவல்துறை தலைமை, தமிழகத்தின் அனைத்து காவல் மாவட்டங்களுக்கும் காவல் அதிகாரிகளை பொறுப்பு அதிகாரிகளாக நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விவசாயிகளின் விவசாயப் பணிகள் பாதிப்பு, விளைபொருட்களைக் கொண்டுசெல்வது உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இனி உடனடியாக அந்தந்த மாவட்டப் பொறுப்பு அதிகாரியைத் தொடர்பு கொண்டு தீர்வு காணலாம்.
கோரிக்கையை ஏற்று உடனடியாக சிறப்பு அதிகாரிகளை நியமித்த தமிழக காவல் துறை தலைவருக்கும், தமிழக வேளாண்துறை செயலாளர் ககன்தீப் பேடிக்கும் விவசாய சங்கங்களின் சார்பில் நன்றி தெரிவித்திருக்கிறார் காவிரி டெல்டா பாசன விவசா சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன்.
ஏற்கெனவே திருச்சி சரகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுவிட்ட நிலையில் ஏனைய வடக்கு, மேற்கு, தெற்கு மண்டலங்களிலுள்ள மாவட்டங்களுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன் விவரம் வருமாறு:
தெற்கு மண்டலம்
மதுரை நகரம் - ஆய்வாளர் ஹேமலதா - 8300017920,
திருநெல்வேலி நகரம் - ஏ.சி தீபு -9498194825,
மதுரை - ஆய்வாளர் சாந்தி - 8300012270,
விருதுநகர் - டிஎஸ்பி விஜயகுமார் – 9498148999,
திண்டுக்கல் - டிஎஸ்பி வீரபாகு 9498173936,
தேனி - டிஎஸ்பி முத்துக்குமார் 9498186926,
ராமநாதபுரம் - ஏடிஎஸ்பி லயோலா 9443282223,
சிவகங்கை - ஆய்வாளர் சம்பத் 9498133429,
தென்காசி - ஆய்வாளர் சரஸ்வதி 9498194862,
திருநெல்வேலி - ஆய்வாளர் சந்திரசேகர் 9498193148,
தூத்துக்குடி - டிஎஸ்பி சண்முகம்– 9498182530,
கன்னியாகுமரி - டிஎஸ்பி கணேசன் 9498182354.
வடக்கு மண்டலம்
சென்னை நகரம் - உதவி ஆணையர் ஜார்ஜ் 9840814413,
செங்கல்பட்டு - ஆய்வாளர் அலெக்சாண்டர் - 9789098861,
காஞ்சிபுரம் - ஆய்வாளர் அன்புச்செல்வி 9498149672,
திருவள்ளூர் - ஆய்வாளர் பத்மஸ்ரீபவி 9498110143,
வேலூர் - டிஎஸ்பி பொற்செழியன் 9498147746,
ராணிப்பேட்டை - ஆய்வாளர் திருநாவுக்கரசு 9444166989,
திருப்பத்தூர் - ஆய்வாளர் ஜெயலட்சுமி 9498150229,
திருவண்ணாமலை – ஆய்வாளர் பாலின் 9894164680,
கள்ளக்குறிச்சி - டிஎஸ்பி ராமநாதன் -9498155692,
விழுப்புரம் - ஆய்வாளர் பூங்கோதை 9498106381,
கடலூர் – ஆய்வாளர் ஈஸ்வரி 9842402972.
மேற்கு மண்டலம்
சேலம் நகரம் – ஆய்வாளர் சதீஷ் 9498166614,
கோவை நகரம் – ஆய்வாளர் கிருஷ்ணன் 9443455153,
திருப்பூர் நகரம் – ஆய்வாளர் ராஜன்பாபு 9498179994,
சேலம் – டிஎஸ்பி லஷ்மணகுமார் 9498169169,
நாமக்கல் – ஆய்வாளர் பெரியசாமி 9498158881,
தருமபுரி – ஆய்வாளர் விஜயலெஷ்மி 9498178825,
கிருஷ்ணகிரி – டிஎஸ்பி ராமமூர்த்தி 9443329531,
கோயம்புத்தூர் – ஆய்வாளர் யமுனாதேவி 9498173173,
ஈரோடு – ஆய்வாளர் நாகமணி 9498175478,
திருப்பூர் – ஆய்வாளர் முருகேசன் 9443381000,
நீலகிரி – ஆய்வாளர் சுஜாதா 9498104777.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT