Published : 23 Apr 2020 07:42 AM
Last Updated : 23 Apr 2020 07:42 AM
ஒவ்வொரு காலகட்டத்திலும் நாட்டுக்காக சேவை செய்தோர், தியாகம் செய்தோரை கவுரவப் படுத்தும் வகையில் சிறப்பு அஞ்சல் தலை, அஞ்சல் உறை ஆகியவற்றை அஞ்சல் துறை வெளியிடுவது வழக்கம்.
நாட்டிலேயே முதல் முறையாக கேரளாவில்தான் கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்நிலையில், கரோனாவால் ஏற்பட்ட பாதிப்பை நினைவுப்படுத்தும் வகையில் சிறப்பு அஞ்சல் உறையை அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது. இந்த தபால் உறையை அம்மாநில ஆளுநர் ஆரீப் முகமது கான் வெளியிட்டார். அதை சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா பெற்றுக் கொண்டார்.
இதுகுறித்து தேசிய விருது பெற்ற முன்னாள் தபால் அலுவலர் ந.ஹரிகரன் கூறுகையில், கரோனா பாதிப்பை நினைவு கூரும் வகையில் கேரளத்தில் அஞ்சல்துறை சிறப்பு தபால் உறையை வெளியிட்டு அதில், மருத்துவர்கள், செவிலியர்கள்,சுகாதாரப் பணியாளர்கள், அவசர ஊர்தி ஓட்டுநர்களை கரோனா போரா ளிகள் (Corona warriors) என கவுரவப்படுத்தி உள்ளது. இந்த தபால் உறையில் வெற்றியின் அடையாளமாக இரட்டை விரலைக் காட்டும் வகையில் சிறப்பு அஞ்சல் முத்திரையையும் அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது என்றார். ஒய்.ஆண்டனி செல்வராஜ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT