Published : 23 Apr 2020 07:02 AM
Last Updated : 23 Apr 2020 07:02 AM
கரோனா ஊரடங்கு உத்தரவால் வரலாற்றில் முதல்முறையாக பய ணிகள் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், ரயில்வே துறைக்கு இதுவரை சுமார் ரூ.12 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய ரயில்வேயில் இயக் கப்படும் 13,349 பயணிகள் ரயில் களில் தினமும் 2 கோடியே 30 லட்சம் பேர் பயணம் செய்து வந்தனர். குறிப்பாக, மும்பை, சென்னைஉள்ளிட்ட 7 முக்கிய நகரங்களில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களில் மட்டும் சுமார் 1 கோடியே 23 லட்சம் பேர் பயணம் செய்தனர்.
ரயில் நிலையங்கள் மூடல்
இதற்கிடையே, கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் ரயில்வே துறையின் 167ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக பயணிகள் ரயில்களின்சேவை முழுவதுமாக நிறுத்தப்பட் டுள்ளது. இதனால், புதுடெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம் உட்பட நாடுமுழுவதும் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. விரைவு, மின்சார ரயில்கள் ஆங்காங்கே பணிமனைகளில் நிறுத்தப்பட்டுள்ளன. பயணிகள் ரயில்கள் ஓடாததால், ரயில்வே துறைக்கு இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ரயில்வே வரலாற்றில் முதன்முறை யாக பயணிகளின் சேவை முற் றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. நாட்டில்திடீரென பெரிய அளவில் ஏற்படும்புயல் மற்றும் கனமழைக் காலங் களில்கூட ஒரு பகுதி மட்டுமே ரயில்களின் சேவை நிறுத்தப்படும். இந்த கரோனா வைரஸ் பாதிப்பால் தான் ரயில்களின் சேவை முதன் முறையாக முடங்கியுள்ளது.
பயணிகள் ரயில்கள் மூலம் மட்டும் ஒரு நாளைக்கு ரூ.145 கோடி வருவாய் கிடைக்கும். இதுதவிர, சரக்கு ரயில்கள், தனியார் நிறுவனங்களின் பார்சல், நடைமேடை கட்டணம் என பல்வேறு வகைகளில் ரயில்வேக்கு ஒரு நாளைக்கு மொத்தம் ரூ.400 கோடிவரை வருவாய் கிடைக்கும்.
சரக்கு ரயில்கள் மட்டும் இயக்கம்
தற்போதுள்ள கரோனா ஊரடங் கால் ரயில்வேக்கு இதுவரை மொத்தம் ரூ.12 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில், பயணிகள் பிரிவில் மட்டும் ரூ.6,500 கோடி இழப்பாகும். இருப்பினும், மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடை யின்றி கொண்டு செல்ல சரக்கு ரயில்கள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன.
பயணிகள் ரயில்களின் சேவை மீண்டும் தொடங்குவது குறித்து ரயில்வே அமைச்சகம் தொடர்ந்து ஆலோசித்து வருகிறது. இருப் பினும், இதுவரை எந்த முடிவையும் ரயில்வே அமைச்சகம் எடுக்க வில்லை’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT