Published : 22 Apr 2020 04:21 PM
Last Updated : 22 Apr 2020 04:21 PM
ஊரடங்கு காலத்தில் உணவு, மருத்துவ உதவி கிடைப்பதில் சிரமங்கள் இருந்தால் பொதுமக்கள் அழைக்கலாம் என கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது:
"குடும்ப வன்முறைகள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மற்றும் முதியோர்களுக்கான அவசர உதவிக்கு 97913 57905 என்ற எண்ணிலும், சமூக நல அலுவலரை 99654 77880 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலருக்கு 95431 48148 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம்.
வன்முறைக்கு ஆட்படுதல், துன்புறுத்தப்படுதல் உள்ளிட்ட புகார்கள் இருப்பின் சம்பந்தப்பட்ட நபரின் பெயர், வயது, பாலினம் ஆகிய தகவல்களோடு மேற்கண்ட எண்களில் தொடர்புகொண்டு தெரிவித்தால் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஆன்லைன் மூலம் இலவசமாக குடும்ப நல ஆலோசனை வழங்கப்படும்.
இதுதவிர, உணவு, மருத்துவ உதவி பெற சிரமப்படுவோரும், இலவச சட்ட உதவி தேவைப்படுவோரும் 0422-2200009, 89460 74678, 70104 87136 என்ற எண்களில் தொடர்புகொண்டால் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, உரிய உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்".
இவ்வாறு கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவினர்கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT