Published : 22 Apr 2020 07:12 AM
Last Updated : 22 Apr 2020 07:12 AM

‘இந்து தமிழ்’ ஆன்லைன் அமர்வு நிகழ்ச்சி: கரோனா சூழலால் முதியோருக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் என்ன?- டாக்டர் முரளிதரா விளக்கம்

சென்னை

கரோனா சூழலால் முதியோருக்கு ஏற்பட்டுள்ள சவால்களைசமாளிப்பது எப்படி? என்பது குறித்து ‘இந்து தமிழ்’ நடத்தியஆன்லைன் அமர்வில் டாக்டர்முரளிதரா பல்வேறு ஆலோசனை களை வழங்கினார்.

‘இந்து தமிழ் திசை’, ‘கிளப் 50பிளஸ்’ சார்பில் ‘உங்கள் மேடை’என்ற கருத்து தள பரிமாற்ற ஆன்லைன் அமர்வு நேற்று முன்தினம் நடந்தது. இதில், ‘கரோனா பாதிப்பால் மூத்த குடிமக்கள் எதிர்கொள்ளும் சவால்கள்’ என்ற தலைப்பில்டாக்டர் முரளிதரா உரையாற்றிய போது கூறியதாவது:

தற்போது கரோனா காரணமாக ஏற்பட்டுள்ள ஊரடங்கு நிகழ்வுயாரும் எதிர்பாராத ஒன்று. வீடுகளில் முடங்கிக் கிடக்க வேண்டியுள்ளதால் மற்றவர்களைக் காட் டிலும் உளவியல்ரீதியாகவும், சமூகரீதியாகவும் பெரிதும் பாதிக் கப்படுவது மூத்த குடிமக்கள்தான். அவர்கள் தினசரி மேற்கொள்ளும் காலை நடைபயணம், வெளியே கடைகளுக்குச் சென்று வருவது, மாலை வேளை உலாவல் என அனைத்து அன்றாட நிகழ்வுகளும் தடைபட்டுள்ளன. மருந்து, மாத்திரை வாங்கக்கூட வெளியே செல்ல முடியவில்லை.

இத்தகைய சூழலில் மூத்த குடிமக்கள் தங்களின் அன்றாட நிகழ்வுகளில் மாற்றங்கள் செய்யவேண்டியது அவசியம். தினமும் காலையில் யோகா, தியானம் செய்யலாம். தினசரி குறைந்தபட்சம் 4 குடும்ப நண்பர்களிடமாவது வீடியோ கால் மூலம் பேசலாம்.வீடுகளில் உள்ள அந்தக்கால புகைப்படங்களை பார்த்து பழைய நினைவுகளை குடும்பத்தினருடன் பகிர்ந்து மகிழலாம். இசை கேட் டல், ஆன்லைனில் நாளிதழ், புத்தகம் படிக்கலாம். சிறுசிறு கலைப்பொருட்களை உருவாக்கலாம்.

ஊடரங்கு முடிவுக்கு வந்த பிறகும் வாழ்க்கை நடைமுறை உடனடியாக பழைய நிலைக்கு வந்துவிடாது. சிறிது காலத்துக்கு முகக் கவசம் அணிவது, வெளியேசென்றுவந்தால் சோப்பு போட்டுகைகளைக் கழுவுவது, பொதுஇடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற செயல்கள் தொடரவே செய்யும். இத்தகைய சூழலுக்கு முதியோர் தங்களைதயார்படுத்திக் கொள்ள வேண் டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து ஆன்லைனில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு் அவர் பதில் அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x