Published : 21 Apr 2020 06:45 PM
Last Updated : 21 Apr 2020 06:45 PM
ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தின் வழிகாட்டலில் இயங்கும் மக்கள் பாதை அமைப்பும் கரோனா நிவாரணம் வழங்கும் பணிகளில் இறங்கியிருக்கிறது.
ஏற்கெனவே சென்னையில் நடந்த நிகழ்வில் ஐஏஎஸ் அதிகாரி சகாயமே பங்கேற்று நிவாரணப் பொருட்களை வழங்கினார். அதன் தொடர்ச்சியாக அந்த அமைப்பின் ராமநாதபுரம் மாவட்டக் கிளை சார்பில், திருவாடானை ஒன்றியம் திருவாடானை சமத்துவபுரத்தில் வசிக்கும் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், ஏழைகள் என 62 குடும்பங்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் அந்த அமைப்பின் மாவட்ட நிதி திட்டப் பொறுப்பாளர் சந்திரசேகர், திருவாடானை ஒன்றியப் பொறுப்பாளர்கள் ஆசிரியர் சரவணன், துரை முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோல், ராமேஸ்வரம் கடற்கரை மாரியம்மன் நகர், புது ரோடு, தங்கச்சிமடம், மாந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் வாழும் ஏழை மீனவர்கள், ஆதரவற்றோர், விதவைகள் என 50 குடும்பங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட மக்கள் பாதை இயக்கத் துணை ஒருங்கிணைப்பாளர் கிளாட்வின், மண்டபம் ஒன்றியப் பொறுப்பாளர் ராமு, தங்கச்சிமடம் ஒன்றியப் பொறுப்பாளர் அந்தோணி தீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT