Published : 21 Apr 2020 08:02 AM
Last Updated : 21 Apr 2020 08:02 AM

அதிகரிக்கும் குடும்ப வன்முறைகள்; ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்படும் பெண்கள் புகார் அளிக்க ஆலோசகர்கள் நியமனம்: மாவட்டந்தோறும் தொலைபேசி எண்கள் அறிவிப்பு

சென்னை

ஊரடங்கு காலத்தில் வன்கொடுமை, அவமான நிகழ்வுகளினால் பாதிக்கப்படும் பெண்களிடம் இருந்து புகார்களை பெற மாவட்டந்தோறும் ஆலோசகர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக, தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையர் கண்ணகி பாக்கியநாதன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில் அனைத்து ஆண்களும் பெண்களும் சிறாரும், முதியோரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி
கிடந்து வேதனையிலும் விரக்தியிலும் அவதியுறுகிறார்கள்.

அத்தகைய சூழலில், பெண்கள் மீதான வன்கொடுமைகள், அவமான நிகழ்வுகள் அதிகரித்துள்ளன என்ற வருத்தமான செய்திகளும், தகவல்களும்வந்துள்ளன. பாதிக்கப்பட்ட பெண்கள் தமக்கு நேர்ந்த துன்பம், மன உளைச்சல் மற்றும் வன்கொடுமை சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை புகாராக கொடுப்பதற்காகவே மாவட்டந்தோறும் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தொலைபேசி எண்கள்

இதன்படி, சென்னை 8056275477, காஞ்சிபுரம் 9940149874, திருவள்ளூர் 9677866219, கோயம்புத்தூர் 9787002687, கடலூர் 8525849462, திண்டுக்கல் 9442939901, ஈரோடு 9688855512, கரூர் 9043985698, கன்னியாகுமரி 9489108444, மதுரை 9894558205, நாகப்பட்டினம் 8608703546, நாமக்கல் 8754244656, நீலகிரி 9843194674, புதுக்கோட்டை 9566306500, இராமநாதபுரம் 9585896272, சேலம் 9840307239, சிவகங்கை 9842142388, தேனி8148497338, தஞ்சாவூர் 9790354563, திருவாரூர் 9486858932, திருப்பூர் 9360394719, திருவண்ணாமலை 9047832091, திருநெல்வேலி 8098777424, திருச்சி 9944914325, வேலூர் 9894488517, விழுப்புரம் 9884786186, விருதுநகர் 9489557611 ஆகிய எண்களில் பாதிக்கப்பட்ட பெண்களோ அல்லது அவரை சார்ந்தவர்களோ ஆலோச கர்களை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவித்து ஆலோசனை பெற்று கொள்ளலாம். மேல் நடவடிக்கை மேற்கொள்வதற்குரிய மனுவையும் பெற்று கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் மாநில மகளிர் ஆணையர் கண்ணணி பாக்கிய நாதன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x