Published : 20 Apr 2020 12:57 PM
Last Updated : 20 Apr 2020 12:57 PM
விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், சில இடங்களில் காவல்துறையினர் விவசாயிகளிடம் கடுமை காட்டுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
இந்நிலையில், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் விளைபொருட்களை எடுத்துச் செல்லும் விவசாயிகளை சில இடங்களில் காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்வதால், தங்களுக்கு சிரமமாக இருப்பதாக விவசாயிகளிடமிருந்து திருச்சி சரக டிஐஜிக்கு தொடர்ந்து புகார்கள் வரப்பெற்றன.
இதையடுத்து, திருச்சி சரகத்துக்கு உட்பட்ட 5 மாவட்டங்களிலும் விவசாயம் தொடர்புடைய குறைகளைத் தீர்ப்பதற்காக, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் டிஎஸ்பி அந்தஸ்திலான ஒரு பொறுப்பு அலுவலரை நியமித்து டிஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
இனி, திருச்சி காவல் சரகத்தில் காவல் துறையினரின் கெடுபிடிகளுக்கு ஆளாகும் விவசாயிகள் இவர்களையோ அல்லது அந்தந்த மாவட்ட கரோனா சிறப்புக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கோ தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தால் குறைகள் விரைவாக நிவர்த்தி செய்யப்படும் என்று டிஐஜி பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
மாவட்டக் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள்:
திருச்சி 0431-2333638,
புதுக்கோட்டை 04322-266966
கரூர் 04324-255100
பெரம்பலூர் 04328-224962
அரியலூர் 04329-222216
மாவட்ட குறைதீர் அதிகாரிகளும் அவர்களது செல்போன் எண்களும்:
திருச்சி மாவட்டம் - சிவசுப்பிரமணியன் 9498158901
புதுக்கோட்டை மாவட்டம் - குணசேகரன் 9498150081
கரூர் மாவட்டம் - சுப்பிரமணியன் 9498104410
பெரம்பலூர் மாவட்டம் - ரவிச்சந்திரன் 9498153276
அரியலூர் மாவட்டம் - கண்ணன் 9498167666
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT