மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Published on

தமிழகத்தில் மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதி காரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் வெப்பச் சலனம்காரணமாக அடுத்த இரு நாட்களுக்கு தஞ்சாவூர், திருவாரூர்,நாகப்பட்டினம், மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதர பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும்.

தேவகோட்டையில் 7 செ.மீ மழை

ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 7 செமீ, ராமநாதபுரத்தில் 4 செமீ, தொண்டி யில் 3 செமீ மழை பதிவாகியுள்ளது.

104 டிகிரி வெயில் பதிவாகும்

தமிழகத்தில் மதுரை, திருச்சி, கரூர், சேலம், தருமபுரி, வேலூர்,திருப்பத்தூர், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஆகிய பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி பதிவாக வாய்ப் புள்ளது. எனவே பொதுமக்கள் காலை 11.30 முதல் மாலை 3 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நேற்று மாலை 5.30 மணி வரை பதிவான வெப்பநிலை அளவுகளின்படி 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்அளவை விட அதிகமாக வெயில்பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் தலா 102 டிகிரி பதிவாகிஉள்ளது.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறி னர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in