

ஊரடங்கு தளர்த்தப்படும் பகுதி களில் எந்தெந்த தொழிற்சாலை கள், வணிக நிறுவனங்கள் இயங் கலாம் என்பது தொடர்பான முதல் கட்ட ஆலோசனை அறிக்கையை முதல்வரிடம் வல்லுநர்கள் குழு இன்று அளிக்கிறது.
ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பிறகு சில கட்டுப்பாடுகள் தளர்த்தப் படும் என பிரதமர் மோடி அறி வித்திருந்தார். அதன்படி, தமிழ கத்தில் ஊரடங்கு கட்டுப்பாடு களைத் தளர்த்தி, குறிப்பிட்ட தொழிற்சாலைகளை இயக்க அனுமதிப்பது தொடர்பாக ஆராய நிதித் துறை செயலர் எஸ்.கிருஷ்ணன் தலைமையில் தமிழக அரசு வல்லுநர் குழுவை அமைத்தது. இக்குழுவில், பல் வேறு துறைகளைச் சேர்ந்த 21 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவின் ஆலோசனைக் கூட்டம் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து நடைபெற்றது. இந்நிலையில், வல்லுநர் குழு தனது முதல்கட்ட அறிக்கையை முதல்வர் பழனிசாமியிடம் இன்று வழங்குகிறது.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்தி:
மத்திய அரசு ஏப்.15-ம் தேதி வெளியிட்ட ஆணையின்படி, தமிழக அரசு ஒரு வல்லுநர் குழுவை நியமித்துள்ளது. அந்தக் குழு, தொடர்ந்து ஆலோசனை நடத்தி, முதல்கட்ட அறிக்கையை முதல் வரிடம் 20-ம் தேதி (இன்று) அளிக்க உள்ளது.
வல்லுநர் குழுவின் ஆலோச னைகளை ஆராய்ந்து முதல்வர் முடிவெடுக்க உள்ளார். எனவே, இதுகுறித்து தமிழக அரசின் ஆணை வெளியிடப்படும்வரை, தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும்.