Published : 19 Apr 2020 07:54 AM
Last Updated : 19 Apr 2020 07:54 AM
நிவாரண உதவி விரைந்து வழங்கப் படுமா? என்ற எதிர்பார்ப்பில் 15 நலவாரியங்களின் உறுப்பினர்கள் உள்ளனர்.
தமிழக அரசின் தொழிலாளர் நலத் துறையின் கீழ் செயல்படும் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா ஓட்டுநர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 12,97,382 உறுப் பினர்களுக்கு தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில், நிவாரண உதவித் தொகை ரூ.1,000 மற்றும் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு மற்றும் ஒரு லிட்டர் பாமாயில் ஆகியவற்றை வழங்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இதனிடையே, கிராம கோயில் பூசாரிகள் நலவாரிய உறுப்பினர் களுக்கு தலா ரூ.1,000 நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
மேலும், தொழிலாளர்கள் நலத் துறையின் கீழ் செயல்படும் உடலுழைப்பு, சலவை, முடிதிருத் துவோர், தையல், பனைமரம், கைத்தறி, பொற்கொல்லர், ஓவியர், மண்பாண்டம், வீட்டுப் பணியாளர் உள்ளிட்ட 15 நலவாரி யங்களைச் சேர்ந்த 14,07,130 தொழிலாளர்களுக்கு தலா ரூ.1,000 நிவாரண உதவித்தொகை வழங் கப்படும் என தமிழக முதல்வர் ஏப்.6-ம் தேதி அறிவித்தும், ஒரு சில மாவட்டங்களில் ஒரு சில வாரிய உறுப்பினர்களுக்கு இந்தத் தொகை வழங்கப்படும் நிலையில், 15 நலவாரிய உறுப்பினர்களுக்கும் முழுமையாக வழங்கப்பட வில்லை.
இதுகுறித்து ரங்கம் நகர மருத்துவர்கள் சமூகநல சங்கம் மற்றும் முடிதிருத்துவோர் தொழி லாளர் நலச் சங்க ஆலோசகர் எஸ்.சுரேஷ், ‘இந்து தமிழ்’ நாளி தழிடம் கூறியது:
ஊரடங்கு உத்தரவால் வருமா னம் இல்லாததால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி யுள்ளது.
தமிழக முதல்வர் அறிவித்துள்ள ரூ.1,000 உதவித்தொகை போதுமா னது அல்ல. ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத் துள்ளோம். நலவாரியத்தில் அனைத்துத் தொழிலாளர்களும் பதிவு செய்யவில்லை. எனவே, அனைவருக்கும் நிவாரணத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து தொழிலாளர் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “தற்போது கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா ஓட்டுநர் நலவாரிய உறுப்பினர்களுக்கு மட்டுமே நிவாரண உதவிகளை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இப்பணி தற்போது நடைபெற்று வருகிறது. மீதமுள்ள நலவாரியங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பான உத்தரவை அரசிடமிருந்து எதிர் பார்த்துள்ளோம்” என்றனர். நலவாரியத்திலுள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் நிவாரணத் தொகையை வழங்க வேண்டும்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT