Published : 18 Apr 2020 03:23 PM
Last Updated : 18 Apr 2020 03:23 PM
தமிழகத்தில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்ட நாட்களில் மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலகப் பணி மேற்கொள்ள விலக்கு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் க. சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணை:
கரோனா நோய் தொற்றை தவிர்க்க அத்தியாவசியப் பணிக்காக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உட்பட பல்வேறு துறைகள் பணியாற்றிட வேண்டும் என்று ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரின் கோரிக்கையை ஏற்று, பல்வேறு துறைகளிலும் உள்ள மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்களின் உடல் குறைபாட்டையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கடந்த 24.3.2020 முதல் 14.4.2020 வரை, அவர்கள் தங்கள் அலுவலகத்தில் பணி மேற்கொள்வதிலிருந்து விலக்களித்து ஆணையிடப்பட்டுள்ளது.
தற்போது தடை உத்தரவு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நாட்களிலும் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் அலுவலக பணி மேற்கொள்ள விலக்கு அளிக்க வேண்டும் என்ற மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரின் கோரிக்கையை ஏற்று, பல்வேறு அரசுத்துறைகளிலும் உள்ள மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்களின் உடல் குறைபாட்டையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, தடை உத்தரவு நீட்டிக்கப்பட்ட 15.4.2020 முதல் 3.5.2020 வரை அவர்கள் தங்கள் அலுவலகத்தில் பணி மேற்கொள்வதில் இருந்து விலக்களித்து அரசாணையிடுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT