Published : 18 Apr 2020 02:32 PM
Last Updated : 18 Apr 2020 02:32 PM
ஊரடங்கு, லாக்-டவுன் காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் மதுபானம் இல்லாமல் இருக்க முடியாதவர்கள்பாடு படுதிண்டாட்டமாகியுள்ளது.
சிலர் அடக்க முடியாமல் சானிட்டைஸரைக் குடித்து பலியானதையும் பார்த்து வருகிறோம். சில இடங்களில் டாஸ்மாக் கடை பூட்டு உடைக்கப்பட்டு மதுபானங்கள் திருடப்படும் சம்பவங்களையும் பார்த்து வருகிறோம்.
இந்நிலையில் திருச்சி நகரத்தில் உள்ள எடமலைப்பட்டி புதூர் என்ற இடத்தைச் சேர்ந்த 65 வயதான மூதாட்டி ஒருவர் அருகில் உள்ள ராம்ஜி நகர் பகுதியில் கபசுரக் குடிநீர் என்ற பெயரில் கள்ளச்சாராயம் விற்று வந்தார். அதுவும் தேநீர் விற்பனை செய்யும் கேனில் அவர் கபசுரக் குடிநீர் என்ற பெயரில் கள்ளச்சாராயம் விற்று வந்துள்ளார்.
இதை அறிந்த போலீசார் கையும் களவுமாக பிடித்து அவரை கைது செய்தனர். கள்ளச்சாராயம் எங்கு காய்ச்சப்பட்டது, இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT