Published : 18 Apr 2020 06:57 AM
Last Updated : 18 Apr 2020 06:57 AM
முதியோர் ஓய்வூதியம் பெறுபவர் கள் உரிய முகவரியில் வசிக்காத தால், தமிழகம் முழுவதும் 94ஆயிரம் முதியோர் ஓய்வூதிய மணியார்டர்கள் வழங்கப் படாமல் தேக்கம் அடைந்துள்ளன.
ஊரடங்கு அமலில் உள்ளதால்ஓய்வூதியத் தொகையை தபால் காரர்கள் முதியோரின் வீட்டு முகவரிக்கு சென்று வழங்கி வரு கின்றனர். சிலர் உரிய முகவரியில் இல்லாததால், தமிழகம் முழு வதும் 94 ஆயிரம் முதியோர் ஓய்வூதிய மணியார்டர்கள் விநியோகம் செய்யப்படாமல் அஞ்சலகங்களில் தேங்கியுள்ளன.
இதுகுறித்து, அஞ்சலக அதிகாரிகள் கூறும்போது, “முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்களில் பலர் தங்களது நிரந்தர முகவரியைக் கொடுக்காமல் தற்காலிக முகவரியைக் கொடுத் துள்ளனர். இவர்கள் தற்போது தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று விட்டனர்.
மேலும், சில முதியோர் தங்களது நிரந்தர முகவரியில் வசிக்காமல் பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். இதனால், தமிழகம் முழுவதும் 94 ஓய்வூதிய மணியார்டர்களை உரியவர்களிடம் வழங்க முடியவில்லை” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT