தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கரோனா தொற்று: பாதிப்பு எண்ணிக்கை 1,323 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கரோனா தொற்று: பாதிப்பு எண்ணிக்கை 1,323 ஆக அதிகரிப்பு
Updated on
1 min read

தமிழகத்தில் இன்று மேலும் 56 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1,323 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 228 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று நிலவரம் குறித்து பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கரோனா இன்றைய நிலவரம் குறித்த பொது சுகாதாரத்துறை தகவல்:

" *இன்று வீட்டுக் கண்காணிப்பில் இருப்பவர்கள் 28 ஆயிரத்து 934 பேர்.

* அரசுக் கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 34.

* இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகள் 29,673.

* நேற்று வரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,267.

* இன்றைக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 56.

* மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,323.

* இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை103.

* மொத்தம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 283.

இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 15. கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இன்று 11 பேருக்கு உறுதி செய்யப்பட்டதில் மொத்த எண்ணிக்கை 228 ஆக அதிகரித்துள்ளது.

அதிகமாக இருக்கும் முதல் 5 மாவட்டங்கள், சென்னை-228, கோவை -127, திருப்பூர் -80, ஈரோடு-70, திண்டுக்கல்- 66 .

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in