Published : 16 Apr 2020 05:35 PM
Last Updated : 16 Apr 2020 05:35 PM
கரோனா தடுப்புக்கான ஊரடங்கு அமலில் இருந்தபோது, தேவையின்றி வெளியில் சுற்றித்திரிந்த நபர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, அவர்களின் வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
தற்கிடையில் தமிழகம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட நான்கு சக்கரம், இரு சக்கர வாகனங்களை உரிமையாளர்களிடம் திருப்பி ஒப்படைக்க தமிழக காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
ஒரு காவல் நிலையத்தில் தினமும் தலா 10 வாகனங்கள் வீதம் திருப்பி ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இப்பணி இன்று தொடங்கியது. திருப்பி ஒப்படைக்கும்போது, ‘‘ ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியதால் வழக்கு பதிந்து வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. தனது வாகனத்தை திருப்பி வழங்கும் பட்சத்தில் ஊரடங்கு விதியை மீற மாட்டேன். மீறினால் என்மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம். காவல் நிலையத்திற்கு விசாரணை நிமிர்த்தமாக அழைக்கும் நேரத்தில் வாகனத்தை ஒப்படைப்பேன். எனது வாகனத்தை நல்ல நிலை யில் பெற்றுக்கொள்கிறேன்,’’ என்ற வாசகங்கள் அடங்கிய மனுவை உரிமையாளர்கள் எழுதிக் கொடுத்துவிட்டு தங்கள் வாகனங்களை திரும்பபெறுகின்றனர்.
இதன்படி, மதுரை நகரில் கார்கள் உட்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களும், புறநகரில் பறிமுதல் செய்த 3 ஆயிரத்துக்கும் மேலான வாகனங்களும் உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கியது.
குறிப்பிட்ட பதிவெண் அடிப்படையில் அழைப்பு விடுவிக்கப்பட்டு தினமும் காலை 6 முதல் 1 மணிக்குள் ஒப்படைக்கப்படுகிறது என, போலீஸார் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT