Published : 16 Apr 2020 12:15 PM
Last Updated : 16 Apr 2020 12:15 PM
குடிபோதையில் பாமக நிர்வாகியை தாக்கிய காவல் ஆய்வாளருக்கு முக்கிய பதவி வழங்குவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, ராமதாஸ் இன்று (ஏப்.16) தன் ட்விட்டர் பக்கத்தில், "வெகுமதி சின்னசேலம் பாமக ஒன்றிய செயலர் சக்திவேலை குடிபோதையில், ஊரே வேடிக்கை பார்த்த நிலையில் வீடு புகுந்து தாக்கிய காவல் ஆய்வாளர் சுதாகர் முதலில் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு அனைத்து மரியாதையுடன் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமர வைக்கப்பட்டார்.
ஆய்வாளர் சுதாகர் மனித உரிமை மீறலுக்காக தண்டிக்கப்பட்டவர். அவர் மீது மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரது கடந்த கால பின்னணி மிக மிக மோசமானது. அவர் மீதான புகாருக்கு விசாரணை இன்றியே தண்டிக்க முடியும். ஆனால், வீடியோ ஆதாரம் வெளியாகியும் நடவடிக்கை இல்லை.
4 நாட்கள் ஆயுதப்படையில் இருந்த சுதாகருக்கு இப்போது அடுத்த வெகுமதியாக கடலூர் மாவட்டம் பெண்ணாடம் காவல் நிலைய ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மனித உரிமை மீறல் குற்றவாளிக்கு இப்படி மகுடம் சூட்டப்படுவதற்கு உபயதாரர் யார்?" என பதிவிட்டுள்ளார்.
வெகுமதி
சின்னசேலம் பா.ம.க. ஒன்றிய செயலர் சக்திவேலை குடி போதையில், ஊரே வேடிக்கை பார்த்த நிலையில் வீடுபுகுந்து தாக்கிய காவல் ஆய்வாளர் சுதாகர் முதலில் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு அனைத்து மரியாதையுடன் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமரவைக்கப்பட்டார்.@CMOTamilNadu #DrunkenPoliceRewarded— Dr S RAMADOSS (@drramadoss) April 16, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT