Published : 16 Apr 2020 07:41 AM
Last Updated : 16 Apr 2020 07:41 AM
தமிழகத்தில் கடலில் மீன்பிடிப்பதற் கான தடைக்காலம் தொடங்கி உள்ளது. ஏற்கெனவே கரோனா வைரஸ் பரவலால் மீன்பிடி பணி கள் கடந்த 1 மாதத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீன்பிடி தடைக்காலத்தை எதிர்கொள்வது தங்களுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர்.
எனவே, மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், படகுகளைச் சீரமைப்பதற்கு ஆகும் செலவை அரசே ஏற்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, கோட்டைப் பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் சங்கத்தினர், ‘இந்து தமிழ்’ நாளி தழிடம் கூறியதாவது:
கடலில் மீன்களின் இனப் பெருக்க காலம் என்பதால் ஏப்.15-ம் தேதி முதல் ஜூன் 15-ம் தேதி வரை விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னை, புதுக் கோட்டை, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக் குடி, கன்னியாகுமாரி உள்ளிட்ட தமிழக கடலோர மாவட்டங்களில் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்வதில்லை.
இந்நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து தமிழக அரசின் தடை உத்தரவால் கடந்த 1 மாதமாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் மீனவர் களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. படகுகளும் இயக்கப்படாமல் உள்ளதால் பழுதடைந்த நிலையில் உள்ளன.
இதற்கிடையில் மீன்பிடி தடைக்காலத்தில் படகுகளை சீரமைத்தால்தான் 2 மாதங்க ளுக்குப் பிறகு மீன்வளத்துறை யிடம் அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல முடியும்.
படகுகளைச் சீரமைக்க ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரைகூட செலவாகும். ஊரடங்கு உத்தரவால் படகு உதிரிபாகங் களுக்கு தட்டுப்பாடு ஏற்பட் டுள்ளது. எனவே, படகுகளைச் சீரமைப்பதற்கான செலவுத் தொகை முழுவதையும் அரசே ஏற்க வேண்டும்.
மேலும், மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிர மாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றனர்.
இதேபோல, புதுச்சேரியிலும் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. கிழக்கு கடல் பகுதியில் புதுச்சேரியில் கனக செட்டிக்குளம் மீனவ கிராமம் முதல் மூர்த்திக்குப்பம் கிராமம் வரையிலும், காரைக்கால் பிரதேச கடல் பகுதியில் மண்டபத்தூர் மீனவ கிராமம் முதல் வடக்கு வாஞ்சூர் மீனவ கிராமம் வரையிலும் விசைப்படகுகளைப் பயன்படுத்தி நேற்று முதல் ஜூன் 15-ம் தேதி வரை ஆழ்கடலில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT