Published : 15 Apr 2020 07:56 AM
Last Updated : 15 Apr 2020 07:56 AM
கரோனா வைரசுக்கு எதிரான போரில் பிரதமர் நரேந்திர மோடி வகுத்து அறிவித்த 7 அம்ச வழிமுறைகளை தவறாமல் பின்பற்றும்படி பொதுமக்களுககு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரோனா வைரஸ் நோய்க்கு எதிராக ஒட்டுமொத்தமாகவும், வெற்றிகரமாகவும் போரிட பிரதமர் நரேந்திர மோடி, நாட்டுமக்களுக்கு 7 அம்ச வழிமுறைகளை வகுத்து அளித்துள்ளார். கரோனாவை கட்டுப்படுத்த இந்தியா எடுத்துள்ள தடுப்பு நடவடிக்கைகளை உலகமே பாராட்டுகிறது. கரோனா தடுப்புதொடர்பாக பிரதமர் மோடி நாட்டுக்கு ஆற்றிய உரையானது தொலைநோக்கு, தைரியம், தலைமைத்துவம் மிகுந்ததாக இருந்தது. அது தற்போதைய எதிர்பாராத சூழலை வெற்றிகரமாக சந்திக்கக்கூடிய ஆற்றல் தருவதாக இருந்தது.
அவரது உரை நாட்டுமக்கள் மீது அவர் வைத்துள்ள கருணை,இலக்கை நோக்கிய பயணத்தை அடைவதற்கான ஆர்வம் ஆகியவற்றை எடுத்துக் காட்டுகிறது. 120 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாஒட்டுமொத்தமாக இணைந்து நின்று தேசிய நலனை பாதுகாக்கும் புதிய இந்தியாவை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. அவர் வகுத்து தந்துள்ள 7 அம்ச வழிமுறைகளை பின்பற்ற வேண்டியதும், கரோனாவைரஸ் தொற்றை தோற்கடிப்பதும் நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்.
அனைத்து மக்களும் தங் களின் குடும்பத்தினர் குறிப்பாக வயதானவர்களின் உடல்நலனைப் பாதுகாப்பது அவசியம். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். கரோனாவுக்கு எதிரான போரில் மனிதாபிமானமும், இந்தியாவும் வெற்றி பெற வேண்டும். இந்த உன்னதமான பணியில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக வழிநடத்த வேண்டும். வீட்டில் இருப்போம். பாதுகாப்பாக இருப்போம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT