Published : 13 Apr 2020 02:13 PM
Last Updated : 13 Apr 2020 02:13 PM
திண்டுக்கல்லில் ஆண்டுதோறும் ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் செய்துவரும் தன்னார்வ அமைப்பு வழங்கும் உணவுகளை அரசு மூலம் வழங்குவதாகக் கூற அதிகாரிகள் வற்புறுத்தல் செய்வதற்கு முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தியது முதல்
பல்வேறு சமூக ஆர்வலர்கள் தங்களால் இயன்ற உதவிகளை ஆதரவற்ற ஏழைகளுக்கு செய்துவருகின்றனர். பலர் உணவுகளை சமைத்து வழங்கிவருகின்றனர்.
இந்நிலையில் தனியார் யாரும் உணவுகள் மற்றும் உதவிகள் வழங்க தடைவிதித்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல்லில் உள்ள தனியார் அமைப்பு ஒன்று ஆண்டுதோறும் ஆதரவற்றவர்கள், சாலையோரம் வசிக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடந்த ஓராண்டுக்கு மேலாக உணவு வழங்கிவருகிறது.
ஊரடங்கு அமல்படுத்தியதுமுதல் கூடுதலாக தினமும் 1600 பேருக்கு உணவு சமைத்து அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று கொடுத்து உதவிவருகின்றனர். இந்தப் பணியை 30 சமூக ஆர்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் நேற்று வழக்கம்போல் உணவு தயாரிப்பில் ஈடுபட்டனர். அங்கு வந்த அரசு அதிகாரிகள். உணவுகளை நீங்களே சமைத்து நீங்களே தாருங்கள். ஆனால் அரசு வழங்குவதுபோல் வழங்கவேண்டும் என இவர்களை கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி கூறுகையில், "திண்டுக்கல்லில் ஆண்டுதோறும் ஆதரவற்றவர்களுக்கு தனியார் அமைப்பு சார்பில் உணவு வழங்கப்பட்டுவருகிறது.
வழக்கமாக வழங்கும் எண்ணிக்கையை விட ஊரடங்கு காலத்தில் உணவு வழங்குவதை அதிகப்படுத்தியுள்ளனர். அரசு எந்த உதவியும் செய்யாமல் தன்னார்வலர்கள் செய்யும் உதவியை அரசு செய்வது போல் அரசு அதிகாரிகள் நிர்பந்திப்பது எந்தவகையில் நியாயம். ஆதரவற்றவர்கள் இருக்கும் இடம் தேடிச்சென்று இவர்கள் உணவு வழங்குவதால் சமூக இடைவெளி பிரச்சனையும் எழ வாய்ப்பில்லை.
இதுபோன்று தன்னார்வலர்கள் உணவு வழங்குவதை அரசு தடைசெய்தால் மக்கள் பட்டினியில் அவதிப்படும்நிலை ஏற்படும். இது கரோனாவை விடக் கொடியது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT