Published : 13 Apr 2020 07:50 AM
Last Updated : 13 Apr 2020 07:50 AM

எழுத்தாளர் அய்க்கண் மரணம்

அய்க்கண்

காரைக்குடி

எழுத்தாளர் அய்க்கண்(89) காரைக்குடியில் நேற்று முன்தினம் இரவு மாரடைப்பால் காலமானார்.

இவர் திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.பல்வேறு இதழ்களில் 1,000 சிறுகதைகள், நாவல்கள், நாடகங்களை எழுதியுள்ளார். 40 சிறுகதைத் தொகுப்புகள், 19 நாவல்கள், 6 வரலாற்று நாவல்கள், 11 நாடகங்கள், 14 கட்டுரைத் தொகுப்புகள் என 90 புத்தகங்கள் படைப்புகளாக வெளிவந்துள்ளன.

கம்பன் அறநிலையச் செயலாளர், வள்ளல் அழகப்பர் சிலை அமைப்புக் குழு ஆலோசகர், உலகத் தமிழ் எழுத்தாளர்சங்க சிவகங்கை மாவட்டத் தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார். இவருக்கு குன்றக்குடி அடிகளார் நற்கதை நம்பி என்ற விருது வழங்கியுள்ளார். மேலும் காஞ்சி காமகோடி பீடம் இலக்கிய எழுத்தாளர் விருது, தஞ்சை தமிழ்த்தாய் அறக்கட்டளை தொல்காப்பியர் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது எனப் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழக அரசின் அண்ணா விருதை கடந்த ஆண்டு பெற்றார். இவரது மனைவி வசந்தா 11 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவரது இறுதிச் சடங்கு காரைக்குடியில் நேற்று நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x