Published : 13 Apr 2020 07:50 AM
Last Updated : 13 Apr 2020 07:50 AM

கரோனா தடுப்பு பணிக்காக ஒப்பந்த அடிப்படையில் ரயில்வே மருத்துவமனையில் மருத்துவர்கள் நியமனம்

மதுரை

கரோனா தொற்று தடுப்பு அவசரப் பணிக்காக மதுரைக் கோட்ட ரயில்வே மருத்துவமனை யில் 3 மாதத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய மருத்துவச் சிகிச்சை நிபுணர்களும், துணை மருத்துவ ஊழியர்களும் (Para Medical Staff) நியமிக்கப்படுகின்றனர்.

இதுதொடர்பாக, தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட மேலாளர் வெளியிட்ட அறிவிப்பு:

மதுரைக் கோட்ட ரயில்வே மருத்துவமனையில் பணிபுரிய மருத்துவர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் தொலைபேசி வாயிலாக நேர்முகத்தேர்வு நடத்தி பணிநியமனம் செய்யப்பட உள்ளனர்.

ஒப்பந்த அடிப்படையிலான இப்பணிக்கு எம்பிபிஎஸ் முடித்த (எம்பிபிஎஸ் உடன் Anaesthetists, Physicians, Chest Physicians, Intensivist படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்) மருத்துவர்களுக்கு ரூ. 75,000 ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்பெஷலிஸ்ட்களுக்கு ரூ. 95,000 வழங்கப்படும். நர்சிங் கவுன்சிலில் இருந்து சான்று பெற்ற செவிலியர் ஊழியர்களுக்கு ரூ. 44,900 (அகவிலைப்படி அனுமதிக்கப்பட்ட பிற படிகள்) வழங்கப்படும். 10-ம் வகுப்பு படித்த ஹவுஸ் கீப்பிங் உதவியாளர் பணிக்கு ரூ.18,000 அகவிலைப்படி அனுமதிக்கப்பட்ட பிற படிகள் சேர்த்து வழங்கப்படும்.

மருத்துவமனை அட்டென்டன்ட்( பத்தாம்வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும், நற்பெயர் பெற்ற மருத்துவமனையில் பணியாற்றியிருப்பவர்களுக்கு முன்னுரிமை) ரூ.18,000 (அகவிலைப்படி, பிற அனுமதிக் கப்பட்ட படிகள்) வழங்கப்படும்.

லேப் டெக்னீஷியன்கள் (பிஎஸ்சி பயோ கெமஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி அல்லது அதற்கு இணையான மெடிக்கல் லேப் பற்றிய படிப்பில் டிப்ளமோ) ரூ.27,000 (அகவிலைப்படி, அனுமதிக்கப்பட்ட பிற படிகள்) ஊதியம் வழங்கப்படும். ரேடியோ கிராபர்-ல் டிப்ளமோ அல்லது ரேடியோ கிராபரில் டிப்ளமோவுடன் கூடிய அறிவியல் பட்டதாரி ரூ.29,000 (அகவிலைப்படி, அனுமதிக்கப்பட்ட பிற படிகள்) வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க மருத்துவர்கள் https://bit.Iy/2Ro9s1z துணை மருத்துவ ஊழியர்கள் https://bit.Iy/3ebV3zE விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்களை ஏப்ரல் 15-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x