Published : 13 Apr 2020 07:26 AM
Last Updated : 13 Apr 2020 07:26 AM
புதுச்சேரி கிருஷ்ணா நகரில் இயங்கி வரும் ‘ஜாலி ஹோம்’ என்ற தொண்டு நிறுவனத்தில் அதிக அளவில் நரிக்குறவர்களின் குழந்தைகள் தங்கிப் பயில்கின்ற னர்.
இங்குள்ள குழந்தைகள் பள்ளிக்குச் சென்று வந்ததும் யோகா பயிற்சி, ஆங்கில மொழிப் பயிற்சி, இசைக் கருவி மீட்ட பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மொத்தம் 160-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இங்கு உள்ளனர். பள்ளி விடுமுறையால் சில குழந் தைகள் பெற்றோரிடம் சென்று விட்ட சூழலில், இதர குழந்தைகள் இங்கேயே உள்ளனர்.
கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலுக்கு நடுவில், புதிய விஷயங்களை சமூக இடைவெளியுடன் கற்கத் தொடங் கியுள்ளனர் இந்தக் குழந் தைகள்.
இதுகுறித்து ‘ஜாலி ஹோம்’ நிறுவனர் புருனோ கூறியதாவது:
குழந்தைகள் மன உளைச்சல் ஏதுமின்றி ஊரடங்கு காலத்தை நகர்த்த பல்வேறு பயிற்சிகளை சமூக இடைவெளியுடன் கற்றுத் தருகிறோம். செஸ், கேரம் மற்றும் பல்லாங்குழி உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளைக் கற்றுத் தருகிறோம். மாலையில் சிலம்பம் கற்கின்றனர். காய்கறி களை வெட்டவும், சமைக்கவும் கற்று வருகின்றனர். இங்கிருந்த படி உயர் கல்வி பயிலும் மாணவர்கள் தற்போது தையல் கற்று வருகின்றனர். தற்போது, அவர்கள் முகக்கவசம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவமனை, காவல் துறைக்கு தேவையான பருத்தி துணியால் ஆன முகக்கவசங்கள் இங்கிருந்து தயாராகி செல்கின்றன.
இதை அனைத்தையும் உரிய சமூக இடைவெளியைப் பின்பற்றிச் செய்து வருகிறோம் என்று தெரிவித்தார். இசைக் கருவிகளை மீட்டுவதற்கு இக்குழந்தைகள் கற்றுள்ளதால் கரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை கிராமிய மெட்டில் பாடியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT