Published : 12 Apr 2020 08:12 AM
Last Updated : 12 Apr 2020 08:12 AM
புற்றுநோயால் அவதிப்பட்ட தன் மனைவியை சைக்கிளில் அமரவைத்துக் கொண்டு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலிருந்து 120 கிலோமீட்டர் தொலைவு பயணித்து புதுச்சேரி ஜிப்மருக்கு அழைத்துச் சென்ற கூலித் தொழிலாளி, தன் மனைவியின் வேதனையை விட தூரம் பெரி தாகத் தெரியவில்லை என்கிறார்.
கும்பகோணத்தை அடுத்த மகாராஜபுரம் மணல்மேடு ஆற்றங்கரைத் தெருவைச் சேர்ந்தவர் அறிவழகன்(60). கூலித் தொழிலாளியான இவரது 2-வதுமனைவி மஞ்சுளா(39). இவர்களுக்கு விஷ்ணு(12) என்ற மனவளர்ச்சி குன்றிய மகன் உள்ளார், அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
மஞ்சுளாவுக்கு, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இடது கன்னத்தில் புற்றுநோய் கட்டி ஒன்று உருவாகியுள்ளது. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அறிவழகன் அழைத்துச் சென்று காண்பித்துள்ளார்.
நோய் முற்றிய நிலையில், மஞ்சுளாவுக்கு கீமோதெரபி சிகிச்சை கொடுக்க வேண்டும் என்ற நிலை உருவானதால், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மாதந்தோறும் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்று வருகிறார் அறிவழகன்.
இந்நிலையில், கடந்த மார்ச் 31-ம் தேதி பரிசோதனைக்கு ஜிப்மருக்கு செல்ல வேண்டும். ஆனால், ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில், என்ன செய்வது எனத் தெரியா மல் யோசனையில் இருந்தார் அறிவழகன். ஊரடங்கு உத்தரவு முடிந்தபிறகு செல்லலாம் என்றாலும், மனைவி புற்றுநோய் வலியால் துடிப்பதைப் பொறுத் துக் கொள்ளும் அளவுக்கு மனமில்லை. இதையடுத்து, மனைவியை எப்படியாவது ஜிப்மருக்கு அழைத்துச் செல் வது என முடிவெடுத்தார்.
இதையடுத்து, கட்டுச்சோறு கட்டி எடுத்துக்கொண்டு கடந்த மார்ச் 29-ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு இடுப்பில் வேட்டி,
தோளில் துண்டுடன் மனைவியைதனது பழைய சைக்கிளில் ஏற்றிக்கொண்டு புதுச்சேரியை நோக்கிப் புறப்பட்டார் அறிவழகன். அணைக்கரை, வடலூர், கடலூர் வழியாக 120 கிலோமீட்டர் தொலைவைக் கடந்து அன்று இரவு 10.30 மணிக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனையைச் சென்றடைந்தார்.
கரோனா தொற்று காரணமாக வெளிப்புற சிகிச்சைப் பிரிவுகள் அனைத்தையும் நிறுத்தி வைத்திருக்கும் ஜிப்மர் மருத்துவமனை
யில், அவசர சிகிச்சைப் பிரிவு மட்டுமே செயல்பட்ட நிலையில், மருத்து வமனை வளாகத்தில் மறுநாள் தங்கியிருந்து விட்டு மார்ச் 31-ம் தேதி காலை மருத்துவர்களைச் சந்தித்து சைக்கிளில் ஏற்றி அழைத்துவந்ததை கூறினார் அறிவழகன். உடனே மஞ்சுளாவை மருத்துவமனை யில் அனுமதித்து, அவருக்குத் தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்தனர்.இருவரையும் மருத்துவமனை வளாகத்திலேயே தங்க வைத்த மருத்துவர்கள், உணவு மற்றும் மருந்துகள் போன்றவற்றை தங்கள் செலவில்வாங்கிக் கொடுத்தனர். 2 நாள் சிகிச்சைக்குப் பிறகு இருவரை யும், ஆம்புலன்ஸில் ஏற்றி சொந்தஊருக்கு அனுப்பி வைத்தனர்.
அளவு கடந்த பாசம்
மனைவியை சைக்கிளில் ஏற்றி புதுச்சேரிக்கு அழைத்துச் சென்றது குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் அறிவழகன் கூறியதாவது:
என் முதல் மனைவி சுசிலா, கடந்த சில ஆண்டுகளுக்கு மாரடைப்பால் இறந்துவிட்டார். என் மூத்த மகன் ரவி, சென்னையில் கட்டிட வேலை செய்துவருகிறார். நான் எங்கு சென்றாலும், சைக்கிளில்தான் செல்வேன். மஞ்சுளாவை 2-வது திருமணம் செய்துகொண்டேன். அவர்மீது எனக்கு அளவு கடந்த பாசம்.
அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு வலியால் துடித்ததை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாமல், தாங்க முடியாமல்தான் சைக் கிளில் ஏற்றி அழைத்துச் சென்றேன்.
டீ கொடுத்த போலீஸார்
புதுச்சேரி எவ்வளவு தூரம்என்பது கூட எனக்குத் தெரியாது. என் சைக்கிளை நம்பி புறப்பட்டுவிட்டேன். சில இடங்களில் போலீஸார் தடுத்தனர். அவர்களிடம் விவரத்தை எடுத்துக் கூறினேன். ஒருசில போலீஸார் டீ கொடுத்து பத்திரமாக செல்லுமாறு கூறினார்கள்.
மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து, ஒரு மாதத்துக்கு தேவையான மாத்திரைகளை கொடுத்தார்கள். தொடர்ந்து சிகிச்சை பெற்றால்தான் காப் பாற்ற முடியும். மஞ்சுளாதான் எனக்கு எல்லோமே, நிச்சயம் புற்றுநோயிலிருந்து காப்பாற்றி விடுவேன் என்கிறார் நெகிழ்ச்சி யுடன்.
கிராம மக்கள் பாராட்டு
கும்பகோணத்திலிருந்து புதுச்சேரிக்கு சைக்கிளில் மனை வியை அழைத்துச் சென்றதை அறிந்த கிராம மக்கள் அறி
வழகனை பாராட்டினர். பல்வேறுஅமைப்பினர் வந்து அறிவழகனைப் பாராட்டி நிதியுதவி அளித்துவிட்டுச் செல் கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT