Published : 11 Apr 2020 04:08 PM
Last Updated : 11 Apr 2020 04:08 PM

ரயில்வே பணிக்கு தொலைபேசி வாயிலாக நேர்முகத் தேர்வு: கரோனாவால் வீடு தேடி வரும் வேலைவாய்ப்பு 

மதுரை

ரயில்வே மருத்துவமனையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான பணிபுரிய மருத்துவர்கள், இதர மருத்துவப்பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் 3 மாதத்திற்கு பணிநியமனம் செய்யப்பட உள்ளனர்.

இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு பணி அவசரம் கருதி, ரயில்வே நிர்வாகம் தொலைபேசி வாயிலாகவே நேர்முகத்தேர்வு நடத்தி பணிநியமனம் செய்யவுள்ளது.

‘கரோனா’ நோய்த் தொற்று தடுப்பு தொடர்புடைய அவசர பணிக்காக மதுரை கோட்ட ரயில்வே மருத்துவமனையில் 3 மாதங்கள் காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய மருத்துவ நிபுணர்களும், துணை மருத்துவு ஊழிய்ரகளும் (Para medical Staff) நியமிக்கப்படுகிறார்கள்.

அதற்காக, தெற்கு ரெயில்வேயின் மதுரை கோட்ட மேலாளர் ஓர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், மதுரை கோட்ட ரயில்வே மருத்துவமனையில் பணிபுரிவதற்கு மருத்துவர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் தொலைபேசி வாயிலாக நேர்முகத்தேர்வு நடத்தி பணிநியமனம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.

ஒப்பந்த அடிப்படையில் எம்பிபிஎஸ் முடித்த( எம்பிபிஎஸ் உடன் Anesthetists, Physicians, Chest Physicians, Intensivistits படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்) மருத்துவர்களுக்கு ரூ.75,000 ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்பெஷலிஸ்ட்களுக்கு ரூ.95,000 வழங்கப்படும். நர்சிங் கவுன்சிலிலிருந்து சான்று பெற்ற செவிலியர் ஊழியர்களுக்கு ரூ.44,900 (அகவிலைப்படி அனுமதிக்கப்பட்ட பிற படிகள்) வழங்கப்படும்.

10-ம் வகுப்பு படித்த ஹவுஸ் கீப்பிங் உதவியாளர்கள் பணிக்கு ரூ.18,000 அகவிலைப்படி அனுமதிக்கப்பட்ட பிற படிகள் சேர்த்து வழங்கப்படும். மருத்துவமனை அட்டென்டன்ட்( பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், நற்பெயர் பெற்ற மருத்துவமனையில் பணியாற்றியிருப்பவர்களுக்கு முன்னுரிமை) ரூ.18,000(அகவிலைப்படி பிறஅனுமதிக்கப்பட்ட படிகள்) வழங்கப்படும். லேப் டெக்னீஷியன்கள்(பிஎஸ்சி பயோ கெமஸ்ட்ரி, மைக்ரோ பையாலஜி அல்லது அதற்கு இணையான மெடிக்கல் லேப் பற்றிய படிப்பில் டிப்ளமோ) ரூ.27,000( அகவிலைப்படி அனுமதிக்கப்பட்ட பிற படிகள்) ஊதியம் வழங்கப்படும்.

ரேடியோ கிராபர் ரேடியோ கிராபர்-ல் டிப்ளமோ அல்லது ரேடியோ கிராபரில் டிப்ளமோவுடன் கூடிய அறிவியல் பட்டதாரி ரூ.29000 (அகவிலைப்படி அனுமதிக்கப்பட்ட பிற படிகள்) வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க மருத்துவர்கள் https://bit.Iy/2Ro9s1z

துணை மருத்துவ ஊழியர்கள் https://bit.Iy/3ebV3zEவிண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்களை வரும் 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x