

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம் முன்பு வரையப்பட்டிருந்த கரோனா விழிப்புணர்வு ஓவியம் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்தது.
கரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக குமரி மாவட்டத்தில் நகர, கிராமப் பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம் முன்பு நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் தமிழ்நாடு ஓவியக் கலைஞர்கள் சங்கத்தினர் கரோனா விழிப்புணர்வு ஓவியம் வரைந்துள்ளனர்.
இது வடசேரி பேருந்து நிலையத்தில் செயல்படும் தற்காலிக காய்கறி சந்தைக்கு வரும் குடும்பத் தலைவிகள், மற்றும் பொதுமக்களை வெகுவாகஹ் கவர்ந்துள்ளது.
கரோனா வைரஸ் போன்ற படங்களை வரைந்து அதன் அருகிலேயே விழித்திரு, விலகியிரு, வீட்டிலிரு என்பதை வலியுறுத்தும் வாசகள் இடம்பெற்றுள்ளது.
மேலும் சமூக விலகலைக் கடைபிடிப்போம், தேசநலனைg காப்போம். சுகாதாரத்துறை, காவல்துறை விதிமுறைகளை கடைபிடிப்போம். கரோனாவை ஒழிப்போம் என்ற விழிப்புணர்வு வாசகங்களும் இடம்பெற்றுள்ளது.