Published : 10 Apr 2020 11:12 AM
Last Updated : 10 Apr 2020 11:12 AM
கள்ளக்குறிச்சியில் மக்கள் நலன் கருதி ராட்சத கிருமிநாசினி தெளிப்பான் கருவியை வணிகப் பிரமுகர்கள் வழங்கினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கள்ளக்குறிச்சியில் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே வருபவர்களின் நலன் கருதி 3 இடங்களில் கிருமிநாசினி அரங்க நுழைவாயிலை அமைத்துள்ளனர்.
இந்த நிலையில், ராணிப்பேட்டை பாரத மிகு மின் நிறுவனம் புதிதாகவும், பிரத்யேகமாவுகம் வடிமைத்துள்ள பெல் மிஸ்லர் எனப்படும் ராட்சத கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரத்தை, கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் கரோனா தடுப்புக் கட்டுப்பாட்டு பகுதிகளில் பயன்படுத்தி வருகிறது. இந்தக் கருவியின் மதிப்பு ரூ.3.54 லட்சமாகும்.
இந்தக் கருவியை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பயன்படுத்திடும் வகையில் கள்ளக்குறிச்சியில் வணிகப் பிரமுகர்களான பாலாஜி, நகைக்கடை உரிமையாளர் குணசீலன், நெல் மற்றும் அரிசி உரிமையாளர் சங்கம் ஆகியோர் இணைந்து ராட்சத கிருமிநாசினி தெளிக்கும் கருவியை நன்கொடையாக மாவட்ட ஆட்சியர் கிரண்குராலாவிடன் நேற்று (ஏப்.9) ஒப்படைத்தனர். இதையடுத்து கள்ளக்குறிச்சியில் கரோனா பாதிப்புக்குள்ளான பகுதிகளில் புதிய கருவியைக் கொண்டு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெல் மிஸ்லர் கருவியின் மூலம் ஹைப்போகுளோரைட் திரவத்துடன் நீர் கலந்து ஒன்றரை மணி நேரம், 30 அடி தூரம் வரை கிருமி நாசினியைத் தெளிக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT