Published : 10 Apr 2020 08:04 AM
Last Updated : 10 Apr 2020 08:04 AM
அலட்சியமாக இருந்து கரோனா பரவலுக்கு காரணமாக இருந்ததாக வெளிநாடுகளை சேர்ந்த மத குருமார்கள் உட்பட 66 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 8-ம் தேதிவரை கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 738 பேரில் 679 பேர் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று தமிழக அரசுஅதிகாரப்பூர்வமாக அறிவித் துள்ளது.
டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், இந்தோனேசியா,தாய்லாந்து, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர். மாநாடு முடிந்த பிறகு, மதம் குறித்து பிரசங்க உரை நிகழ்த்துவதற்காக வெளிநாட்டு மதகுருமார்களை சிலர் தமிழகத்துக்கு அழைத்து வந்தனர்.
கரோனா வைரஸ் பாதிப்புவேகமாக பரவிவரும் நிலையில்,அலட்சியமாக இருந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கும் சென்று கரோனா பரவலுக்கு காரணமாக இருந்ததாக அவர்கள் மீது புகார் கூறப்பட்டுள்ளது. சுற்றுலா விசாவில் வந்தவர்கள், விதிகளை மீறி மதப் பிரசங் கத்தில் ஈடுபட்டதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, மதுரை, ஈரோடு,செங்கல்பட்டு, சேலம் ஆகியபகுதிகளில் இந்தோனேசியா,தாய்லாந்து, வங்கதேசத்தை சேர்ந்த 33 மத குருமார்கள் மீதுதமிழக காவல் துறையினர்வழக்கு பதிவுசெய்துள்ளனர்.
மேலும் மத குருமார்களுக்கு உதவியாக வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும்தமிழகத்தை சேர்ந்த சிலர் உட்பட 33 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT