Published : 09 Apr 2020 01:37 PM
Last Updated : 09 Apr 2020 01:37 PM
'எமலோகத்தில் இடமில்லை எனவே வீட்டைவிட்டு வெளியில் வராதீர்கள்' என திண்டுக்கல் போலீஸார் கரேனா வைரஸ் பாதிப்பு குறித்த பேனர்கள் வைத்து விழிப்புணர்வுவை ஏற்படுத்தியுள்ளனர்.
ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் என்பதற்காக திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
முதற்கட்டமாக இருசக்கரவாகனங்களில் சுற்றித்திரிபவர்களை மொத்தமாக நிறுத்தி மைக் மூலம் அவர்களுக்கு கரோனை வைரஸ் தொற்றின் வீரியம் குறித்து அறிவுரை கூறி வீட்டிலேயே இருக்க கேட்டுக்கொண்டனர்.
இருந்தபோதும் மக்கள் நடமாட்டம் குறைந்தபாடில்லை. இதையடுத்து சாலையில் கரோனா வைரஸ் படம் வரைந்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அடுத்தகட்டமாக தற்போது எமன் கூறுவது போல் திண்டுக்கல் நகர்பகுதியில் பேனர்கள் வைத்துள்ளனர்.
‘எமலோகத்தில் இடமில்லை. தயவுசெய்து வீட்டைவிட்டு யாரும் வெளியேவரவேண்டாம். மக்கள் நலனில் திண்டுக்கல் நகர் தெற்கு காவல்நிலையம்’ என பேனரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் நகரின் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனர் மக்களை தங்கள் நலனில் அக்கறை கொள்ளச்செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT