Last Updated : 07 Apr, 2020 07:02 AM

 

Published : 07 Apr 2020 07:02 AM
Last Updated : 07 Apr 2020 07:02 AM

பாட்டினில் அன்பு செய்யும் ‘விழித்திரு.. தனித்திரு...’

சி.சத்யா

சென்னை

மக்கள் ஒருவித அச்சத்துடன் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். இச்சூழலில் நம்பிக்கையூட்டும் வகையிலும் மனநெருக்கடிகளில் இருந்து விடுபட வலியுறுத்தும் ஒரு பாடல் வெளியிடப்பட்டு உள்ளது.

சொல்லிசை கலைஞர் இன்சமாம் உல் ஹக்கின் அர்த்தமுள்ள வரிகளில், இசையமைப்பாளர் சி.சத்யாவின் இசையமைப்பில் யூ-டியூபில் வெளியிடப்பட் டுள்ளது இந்தப் பாடல்.

‘விழித்திரு.. தனித்திரு...’ எனத் தொடங்கும் இப்பாடல் இன்றைக்கு நமக்கெல்லாம் தேவையான பாதுகாப்பையும் நம்பிக்கையையும் அள்ளி வழங்குகிறது.

‘பணிந்திரு அடைந்திரு

உன் உறவுகளுடன் நீ நேரம் பகிர்ந்திரு

இதுவும் கடந்து போகும் நண்பா

உறுதியாயிரு நெஞ்சோடு

அலட்சியம் வேண்டாம் நண்பா

உயிர்களை காப்போம் நாமே

இந்த சாதியும் மதமும் பேதமும் இல்லாமல்

புதிய வாழ்க்கை வேண்டுமென்றால்

மனிதம் போற்று இப்போது

ஒற்றுமை போதுமே

உலகம் அமைதி கொள்ளுமே’

எனும் வரிகளைக் கொண்டஇப்பாடல், ஒரு நாட்டின் சட்டங்களை மதித்து நடப்பதன் அவசியத்தை வலியுறுத்துவதுடன் சாதி,மத, இன பேதமற்ற சன்மார்க்கத்தையும் வலியுறுத்துகிறது. இப்பாடலை சத்யபிரகாஷ், சத்யன் மகாலிங்கம், சுதர்சன் அசோக், அபே, கணேசன் மனோகரன், இன்சமாம் உல் ஹக், சி.சத்யா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

இந்தப் பாடலை, வார்த்தை களின் அர்த்தங்களுக்கு ஏற்ப சில இடங்களில் மெல்லிசையும், சில இடங்களில் ஹிப்-ஹாப் இசையும் சேர்த்து நுட்பமானஇசைத்திறனுடன் இசையமைப் பாளர் கோர்த்துள்ளார்.

அமைதிக்கு பியானோ (அப்னே), புல்லாங்குழல் (அமிர்தவர்சினி), கிதார் (சிமியான் டெல்ஃபர்), அதிரடிக்கு தாளவாத் தியங்களை வாசித்திருக்கும் (கிருஷ்ணா கிஷோர், ஆர்.கே.சுந்தர்) ஆகிய இசைக் கலைஞர்களின் பங்களிப்பும் ஒலி, ஒளிக்கலவையும், காட்சித் தொகுப்பும் நேர்த்தியான ஒரு குறும்படத்தைப் பார்க்கும் உணர்வை அளிக்கின்றன.

‘விழித்திரு.. தனித்திரு..’ பாடலை ரசிக்க: https://youtu.be/WJv51DbfsnQ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x