Published : 09 Aug 2015 06:03 PM
Last Updated : 09 Aug 2015 06:03 PM

வைகை ஆற்றில் புதைந்து கிடக்கும் பழங்கால நாணயங்களைத் தேடும் தொழிலாளர்கள்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வைகை ஆற்றில் புதைந்து கிடக்கும் பழங்கால நாணயங்களைத் தேடும் பணியில் கும்பகோணம் கூலித் தொழிலாளர்கள் குடும்பத்தோடு ஈடுபட்டுள்ளனர்.

மனித நாகரிகம் ஆற்றங்கரை யோரத்தில் தோன்றியதற்கான வரலாறுகள் உண்டு. ஆற்றங் கரையோரம் மக்கள் பயன்படுத் தியதற்கான தடயங்களும், சான்று களும் அவ்வப்போது ஆற்றுப்படு கைகளில் கிடைத்து வருகின்றன.

பழங்காலப் பொருட்களான நாணயங்கள் மூலம் மக்கள் வாழ்ந்ததற்கான காலகட்டத்தை கணக்கிடுகின்றனர். நாணயங்கள் மூலம் மனித நாகரிகங்களை அறிந்து கொள்வதால் பழங்கால நாணயங்கள் சேகரிப்பும் முக்கியத் துவம் பெறுகிறது. கண்டெடுக்கும் நாணயங்களை பாதுகாப்பதும், பழங்கால நாணயங்கள் சேகரிக்கும் பழக்கமும் தொடர்கிறது.

ஆற்றுப்பகுதியில் நாணயங்களைத் தேடுவதையே 'பார்வை' எனும் தொழிலாகக் கொண்டுள் ளனர் கும்பகோணம் பகுதி கூலித் தொழிலாளர்கள். கும்பகோணம், தஞ்சாவூர் பகுதியில் ஆறு மாதங்கள் விவசாய வேலைகள், கூலி வேலைக்குச் செல்கின்றனர். வேலை கிடைக்காத ஆறு மாத காலத்துக்கு தமிழகத்தில் ஆறுகளைத் தேடிச் செல்கின்றனர்.

காவிரி, வைகை, தாமிரபரணி என ஆறுகளைத் தேடியும், ஆற்றில் உள்ள படித்துறைகளிலும் தமது நாணயங்களை தேடும் 'பார்வை' தொழிலில் ஈடுபடுகின்றனர். ஆற் றிலேயே சமைத்தும், அங்கேயே தங்கியும் வேலை பார்க்கின்றனர்.

இது குறித்து பட்டீஸ்வரம் ராஜேந்திரன்(60) கூறியதாவது:

கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் நடவுப் பணிக்கும், விவசாயக் கூலி வேலைக்கும் செல்வோம். மரம் வெட்டவும், கட்டிட வேலைக்கும் செல்வோம்.

ஆறு மாதங்களுக்கு வேலை கிடைக்காது. அப்போது மட்டும் ஆறுகளைத் தேடி 'பார்வை' (நாணயங்கள் தேடல்) தொழிலுக்குச் செல்வோம். கிடைக் கும் பழங்கால நாணயங்களை, நாணயங்கள் சேகரிப்பவர்கள், கல்லூரி பேராசிரியர்களிடம் கொடுப்போம்.

இதில், நிரந்தர வருமானம் கிடை யாது. கிடைக்கும் நாணயங்களின் பழமையைப் பொறுத்து கூலி கிடைக்கும். கிடைக்கும் நாணயங் களை, கும்பகோணம், தஞ்சாவூர், மதுரை பகுதியில் இதற்கென உள்ள கடைகளில் விற்போம். திருச்சி காவிரி ஆறு, கொள்ளிடம், வைகை ஆறு, தாமிரபரணி ஆற்றுப் பகுதிக்கு சென்று நாணயங்களைத் தேடுவோம்'' என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x