Published : 06 Apr 2020 01:01 PM
Last Updated : 06 Apr 2020 01:01 PM
தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் மகள் உ.பிரியதர்ஷனி கரோனா நோய்த் தடுப்பு முதல்வரின் பொது நிவாரண நிதிக்கென ரூ. 11 லட்சம் வழங்கினார்.
தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி. உதயகுமார் ஏற் பாட்டின்பேரில், மதுரை திருமங்கலம் தொகுதி முழுவதும் பொது மக்களுக்கு கரோனா வைரஸ் பரவல் தடுப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதையொட்டி மேலும், பொது மக்களுக்கான முகக்கவசம், சோப்பு, கிருமிநாசினி உள்ளிட்ட தடுப்புச் சாதனங்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியை திருமங்கலம் எம்எல்ஏ அலுவலகத்தில் வைத்து, அமைச்சரின் மகளும், அம்மா சாரிடபிள் டிரஸ்ட் செயலருமான உ. பிரியதர்ஷனி தொடங்கி வைத்தார்.
இதையடுத்து தொகுதி முழுவதும் கரோனா தடுப்பு சாதனங்களும் மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் அம்மா சாரிடபிள் டிரஸ்ட் சார்பில், கரோனா நோய் தடுப்பு முதல்வர் பொதுநிவாரண நிதிக்கென ரூ.11லட்சம் வழங்கப்பட்டது.
இதற்கான காசோலையை வங்கி மூலமாக நிவாரண நிதிக்கு அனுப்பும் வகையில், டிரஸ்டின் ஆடிட்டர் மருதப்பனிடம் டிரஸ்ட் செயலர் உ.பிரியதர்ஷனி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் டிரஸ்டின் இயக்குநர் உ. தனலட்சுமி மற்றும் பேராசிரியர்கள் ஜெனட் சங்கர், ராஜசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT