Published : 06 Apr 2020 12:12 PM
Last Updated : 06 Apr 2020 12:12 PM
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக திருநெல்வேலி மாநகரில் மாவட்ட ஆட்சியர் உத்திரவுபடி இன்று முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்தது.
அதன் விவரம் வருமாறு:
1. திருநெல்வேலி மாநகரில் நான்கு சக்கர வாகனம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் மருத்துவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தவிர மற்ற யாரும் நான்கு சக்கர வாகனம் பயன்படுத்த கூடாது.
2 .மாநகரில் அத்தியாவசியப் பொருட்களுக்காக வெளியே செல்லும் மக்கள் இரண்டு கிலோ மீட்டருக்கு உள்ளேயே தங்களுக்கான தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும். இரண்டு கிலோ மீட்டருக்கும் மேலாக வெளியே சென்றால் அவர்கள் மீது வழக்கு தொடரப்படும்.
3. பால், மருந்து, காய்கறி, மளிகை போன்ற அத்தியாவசிய பொருட்கள் தமிழக அரசின் உத்தரவுப்படி காலை 6மணி முதல் மதியம் 1மணி வரை மட்டுமே செயல்படும்.
பொதுமக்கள் அனைவரும் இந்த உத்தரவுக்கு முழுவதுமாக ஒத்துழைத்து இந்த வைரஸ் நோய் மேலும் பரவாமல் இருக்க பூரண ஒத்துழைப்பு அளிக்க காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
திருநெல்வேலியில் இதுவரை 293 வழக்குகள், 130 வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மாநகரத்தின் எல்லைப்பகுதியில் 07-சோதனைச் சாவடிகளும், மாநகரத்தின் உட்புறப் பகுதியில் 16-சோதனைச் சாவடிகளுடன், 48 ரோந்து வாகனங்களும் 1030 காவலர் மற்றும் ஊர் காவலர் படையுடன் தொடர்ந்து பணியாற்றி கொண்டிருக்கிறோம். பொதுமக்களும் நோய் தொற்று அதிகம் பரவாமல் அரசுடன் இணைந்து ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.
விதிமுறைகளை மீறி வெளியே வந்து பொதுமக்கள் யாரும் இருசக்கர வாகனங்களை காவல் துறையிடம் தானமாக வழங்க வேண்டாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT