Published : 05 Apr 2020 03:07 PM
Last Updated : 05 Apr 2020 03:07 PM

ஈரோடு மாவட்டத்தில் 1 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு  கண்காணிப்பு:  கலெக்டர் கதிரவன் பேட்டி

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ராணிப்பேட்டை பெல் நிறுவனத்திடம் இருந்து வாங்கிய நவீன கிருமிநாசினி தெளிப்பான் எந்திரத்தை பார்வையிட்ட கலெக்டர் கதிரவன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் .

அப்போது அவர் கூறியதாவது:-

ராணிப்பேட்டை பெல் நிறுவனத்திடம் இருந்து ஈரோடு கிழக்கு ,கோபி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3.50 லட்சம் மதிப்பில் நவீன கிருமிநாசினி தெளிப்பான் எந்திரம் வாங்கப்பட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற எந்திரம் தேவைப்பட்டால் எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்க தயாராக இருக்கிறார்கள் வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது நேற்று கூட முதலமைச்சர் கடைகளின் நேரங்களை குறைத்து அறிவித்துள்ளார்.

ஈரோடு பொருத்தவரை மக்கள் நன்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள். 28 பேருக்கு கரோனா தொற்றுக் உறுதி செயப்பட்டுள்ளது. நாலு பேர் கோயம்புத்தூரில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றுவரை 89 பேர் சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் இதில் ஏற்கனவே 28 பேருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 15 பேரின் ரத்த, சளி மாதிரிகள் முடிவு இன்னும் வர வேண்டியுள்ளது.

46 பேருக்கு தொற்று இல்லை என உறுதியாகி உள்ளது. இதுபோக கோபி இரண்டு பகுதியில் கோபி டவுன் கரட்டடிபாளையம், நம்பியூர் பவானியில் கவுந்தப்பாடி சத்தியமங்கலம் மற்றும் ஈரோடு மாநகர் பகுதியில் 10 இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது 29,809 குடும்பங்கள் உள்ளன. ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 809 பேர் உள்ளனர் அவர்கள் வீடுகளில் கண்காணிப்பில் உள்ளனர்.

நேற்று உள்ளாட்சி அமைச்சர் அனைத்து வீடுகளிலும் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார் அதற்கான அறிவிப்பு இன்று வெளிவரும் என்று எதிர்பார்க்கிறோம். அறிவிப்பு வந்ததும் எல்லா வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்யப்படும். ஈரோடு பொறுத்தவரை மளிகை பொருட்கள் தட்டுப்பாடு இல்லை இதுகுறித்து ஏற்கனவே கூட்டம் நடத்தப்பட்டு அவர்களுக்கு தேவையான அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கரோனா குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. இதுவரை சமூக தொற்றாக அது மாறவில்லை. தேவையான முன்னெச்சரிக்கை நாம் எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது தென்னரசு எம்எல்ஏ மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் உள்பட பலர் உடனிருந்தன

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x