Published : 04 Apr 2020 08:25 PM
Last Updated : 04 Apr 2020 08:25 PM

தெளிவாக, தன்னம்பிக்கையுடன் பேட்டி கொடுக்கிறார்: பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு

தமிழக சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் தினமும் மாலையில் கரோனா அப்டேட்டைக் கொடுத்து வருகிறார். அதை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் பாராட்டியுள்ளார்,

கரோனா தொற்று நோய்த் தடுப்பு முயற்சியில் தமிழகத்தின் அனைத்துத் துறைகளும் முடுக்கி விடப்பட்டு தீவிரச் செயல்பாட்டில் உள்ளன. இதில் முதன்மையான இடத்தில் இருக்கும் மூன்று முக்கியத் துறைகள் பொது சுகாதாரத்துறை, காவல்துறை, நகராட்சி நிர்வாகத்துறை ஆகும்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் நேரடியாக களத்தில் உள்ள துறை பொது சுகாதாரத்துறை. இதன் செயலாளராக கடந்த ஆண்டு மாற்றம் செய்யப்பட்டு பொறுப்பேற்றவர் பீலா ராஜேஷ். இவர் 1997-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி. இவரது தந்தை ஓய்வுபெற்ற டிஜிபி. தாயார் 2006-11 ஆண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்த ராணி வெங்கடேசன்.

பீலா ராஜேஷ் சாதாரணமாக தனது பணியைப் பார்த்து வந்த நிலையில் கரோனா பாதிப்பு வந்தவுடன் ஊடக வெளிச்சத்துக்கு வந்தார். அதிலும் கடந்த ஒருவாரமாக நோய்த்தொற்று உள்ளோர் அதிகரித்த நிலையில், அவர் தினமும் மாலையில் பேட்டி அளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

செய்தியாளர்களின் பல்முனைக் கேள்விகளுக்கு பீலா ராஜேஷ் தெளிவாக பதிலளித்து வருகிறார். இந்நிலையில் அவரை சமூக வலைதளங்களில் பாராட்டத் தொடங்கிவிட்டனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரமும் தனது ட்விட்டர் பக்கத்தில் பீலா ராஜேஷைப் பாராட்டியுள்ளார்.

அதற்க்ய்ஜ் கீழே பதிலளித்துள்ள நெட்டிசன்கள், காங்கிரஸ் ரத்தம் அல்லவா அப்படித்தான் இருக்கும் என்றும், வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி என்றும் பாராட்டியுள்ளனர்.

ப.சிதம்பரம் தன் ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை செயலாளர் தெளிவாகவும் தன்னம்பிக்கையுடனும் ஊடகங்களுக்குப் பேட்டி அளிப்பது பாராட்டிற்குரியது!” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x