Published : 04 Apr 2020 06:46 PM
Last Updated : 04 Apr 2020 06:46 PM
அத்தியாவசிய சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸின் மாநில இளைஞரணித் தலைவர் யுவராஜா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக யுவராஜா இன்று (ஏப்.4) வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவில் வரலாறு காணாத வகையில் கரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், சில தனியார் மருத்துவமனைகள் அத்தியாவசிய சேவைகளைத் தர மறுப்பது மிகவும் மனவேதனை அளிக்கிறது.
1. டயாலிசிஸ் மற்றும் புற்றுநோயாளிகளுக்கு கீமோதெரபி தரப்படுவதில்லை என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
2. நரம்பியல் நோய்களுக்கு தேவையான சிகிச்சை தர மறுக்கிறார்கள்
3. மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிகிச்சைகளைத் தர மறுக்கிறார்கள்.
4. இதய சம்பந்தமான நோய்களுக்கு சிகிச்சை தர மறுக்கிறார்கள்
5. ஏழை, எளிய மக்களுக்கு கரோனா பரிசோதனையை இலவசமாகவும் தேவையிருப்பின் தனியார் மருத்துவமனையில் ரூ.4,500க்குப் பதில் ரூ.500க்கு கரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.
மேலும், கரோனா வைரஸுக்கு மட்டும் சிகிச்சை அளித்தால் மற்ற நோயினால் மனிதன் மரணத்தைத் தழுவ நேரிட்டால் என்ன செய்வது?
எனவே மத்திய, மாநில அரசுகள் சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என யுவராஜா வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT