Published : 04 Apr 2020 11:00 AM
Last Updated : 04 Apr 2020 11:00 AM
ஊரடங்கு காலத்தில் அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் பலர் விளையாட்டாகவும் வீர சாகசம் செய்வதாக எண்ணி வெளியில் சுற்றி வருகிறார்கள் அவர்களுக்கு கடுமையாக தண்டனை வழங்கப்படும் என்று விருதுநகர் ஆட்சியர் கண்ணன் எச்சரித்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டமன்ற அரங்கில் ஆட்சியர் கண்ணன் தலைமையில் அனைத்து மத பிரதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள், துணை காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் மற்றும் மத பிரநிதிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வழிபாடுகள் அனைத்தும் அவரவர் வீட்டிலேயே வைத்துக் கொள்ள ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கண்ணன் விருதுநகர் மாவட்டத்தில் வருகின்ற 14ம் தேதி வரை நடைபெறும் மதம் சார்ந்த வழிபாடுகளில் 4 நபர்கள் மட்டும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 25ம் தேதி முதல் தற்பொழுது வரை 144 தடையை மீறியதாக 1214 நபர்கள் மீது வழங்குகள் பதிவு செய்யப்பட்டு 672 வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்றார்.
மேலும் மாவட்டம் முழுவதும் 1877 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த மாவட்ட ஆட்சியர் கண்ணன் அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் பலர் விளையாட்டாகவும் வீர சாகசம் செய்வதாக எண்ணி வெளியில் சுற்றி வருகிறார்கள் அவர்களுக்கு கடுமையாக தண்டனை வழங்கப்படும் என்றார்.
விருதுநகர் மாவட்ட அரசு தலைமை மருந்துவமனையில் 17 நபர்கள் தனிமைபடுத்தப்பட்டு இருந்தார்கள். அதில் 9 நபர்கள் தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் 3 கட்ட சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருந்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்கள் அவர்கள் விரைவில் முழு குணம் அடைவார்கள் என்றார்.
மேலும் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்த 71 பேர் தனிமைபடுத்தபட்டு அவர்கள் அனைவரும் சுகாதார துறையினர் மூலம் கண்காணிக்க பட்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் கொேரானா வைரஸ் 3ம் கட்டத்தை அடையும் பட்சத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக பள்ளி கல்லூரிகளின் விடுதிகள் சுத்தம் செய்யப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் கூறினார்.
மேலும் மாவட்டத்தில் 9 பே௫க்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆனது.
இதை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள், அவர்களோடு பழக்கம் வைத்துக்கொண்டவர்கள் ஆகியோரை கண்டறியும் பணியும் நடைபெற்று வ௫வதோடு சம்மந்தப்பட்ட பகுதிகளும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT