Published : 02 Apr 2020 05:15 PM
Last Updated : 02 Apr 2020 05:15 PM

திண்டுக்கல் நகரில் ஒரே பகுதியைச் சேர்ந்த 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி: பாதுகாப்பு வளையத்திற்குள் பேகம்பூர் பகுதி

திண்டுக்கல் பேகம்பூர் பகுதிக்குச் செல்லும் பகுதிகளில் தடுப்புக்கள் வைத்து மறித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 17 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் திண்டுக்கல் நகர் பேகம்பூர் பகுதியில் மட்டும் பாதிப்புக்குள்ளானோர் 10 பேர் உள்ளதால் அப்பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பட்டுக்குள் கொண்டுவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து டெல்லி மாநாட்டிற்குச் சென்று வந்த 17 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டது.

இதில் 10 பேர் திண்டுக்கல் பேகம்பூர் பகுதியை சேர்ந்தவர்கள், இருவர் நிலக்கோட்டை, ஐந்துபேர் ஒட்டன்சத்திரம் நகரை சேர்ந்தவர்கள். இவர்களுடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினர் தனிமைப்படுத்தப் படுத்தப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் மொத்தம் 10 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதையடுத்து அப்பகுதி முழுவதையும் போலீஸார் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர்.

பேகம்பூர் பகுதியில் உள்ள நத்தர்சாதெரு, மக்கான்தெரு, பூச்சிநாயக்கன்பட்டி மற்றும் திண்டுக்கல் ரவுண்ட்ரோடு புதூர் ராம்நகர், பிஸ்மிநகர், தோமையார்புரம், ஒட்டன்சத்திரத்தில் உள்ள சம்சுதீன்காலனி, மாணிக்கம்பிள்ளை பேட்டை, நிலக்கோட்டை அருகே கோடாங்கிநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இப்பகுதிகளை சுற்றி

பேரிகார்டுகள் அமைத்து போலீஸார் தங்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர். சுகாதாரப்பணியாளர்கள் வீடுவீடாகச்சென்று மருத்துவபரிசோதனை மற்றும் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

கரோனா தொற்று ஏற்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் 31 பேருக்கு பரிசோதனை:

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மொத்தம் 69 பேர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 17 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் டெல்லி மாநாட்டிற்குச் சென்றுவந்தவர்களில் 17 பேருக்கு கரோனா தொற்று உறுதி என்ற நிலையில், தற்போது மேலும் 31 பேர் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான முடிவுகள் இன்னமும் வரவில்லை. முடிவுகள் பாசிட்டிவ்வாக வரும்பட்சத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x