Published : 02 Apr 2020 08:23 AM
Last Updated : 02 Apr 2020 08:23 AM
டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பிய மேலப்பாளையத்தைச் சேர்ந்த 16 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி ஆகியிருக்கும் நிலையில், திருநெல்வேலி மாநகராட்சியில் இருந்து மேலப்பாளையம் தனி மைப்படுத்தப்பட்டு போலீஸ் வளையத்துக்குள் கொண்டு வரப் பட்டுள்ளது.
மேலப்பாளையம் பகுதியில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் நெருக்கமான குடியிருப்புகளில் வசிக்கிறார்கள். இங்கிருந்து டெல்லி மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பிய 16 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மேலப்பாளையம் பகுதியை தனிமைப்படுத்த, குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 144-ன் படியும், தொற்று நோய்கள் சட்டம் 1897 ஷரத்து 2-ன் படி யும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உத்தரவிட்டார். அதன்படி, பிற பகுதிகளில் இருந்து மேலப் பாளையத்துக்குச் செல்லும் அனைத்து வழிகளும் அடைக் கப்பட்டு, போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் இல்லாத வகையில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட மாநகர் காவல்துறை நட வடிக்கை எடுத்துள்ளது. இதற் கான ஏற்பாடுகளை காவல் ஆணையர் தீபக் தாமோர் உள் ளிட்ட அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
மேலப்பாளையம் பகுதி மக் கள் அனைவரும் அவர்களது வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள் ளனர். இப்பகுதியில் காய்ச்சல், இருமல், சளி பிரச்சினை உள் ளவர்களைக் கண்டறியும் பணியில் 70 செவிலியர்கள், 70 மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வீடு வீடாகச் சென்று இதுகுறித்த விவ ரங்களை சேகரித்து வருகிறார்கள்.
தனி வார்டுகளில் டாக்டர் உட்பட 19 பேர் அனுமதி
டெல்லி மாநாடு சென்று திரும்பிய திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் 19 பேர் அரசு மருத்துவமனைகளில் உள்ள கரோனா தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 27 பேருக்கு நேற்று முன்தினம் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று திருநெல்வேலி கோடீஸ்வரன் நகரைச் சேர்ந்த 5 பேர் திருநெல்வேலி கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுபோல், தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 8 பேர், தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினத்தை சேர்ந்த டாக்டர் உட்பட இருவர், பேட்மா நகரைச் சேர்ந்த இருவர், தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவர், கயத்தாறை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 19 பேர் கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த 19 பேரின் ரத்த மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் அவர்கள் தங்கியிருந்த வீடுகள், சுற்று வட்டாரப் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment