Published : 01 Apr 2020 08:39 AM
Last Updated : 01 Apr 2020 08:39 AM
விடுமுறையில் உள்ள மாணவர்களுக்கு கலை இலக்கிய போட்டி நடத்தப்பட்டு மொத்தம் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது: ஊரடங்கு விடுமுறையில் வீட்டிலிருக்கும் மாணவர்களுக்கு கலை இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
அதன்படி, நாள்தோறும் கதை, கவிதை, ஓவியம், குறும்படம், ஸ்டேண்ட் அப் காமெடி என பலவிதமான போட்டிகள் நடத்தப்பட்டு மொத்தம் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தோர் மட்டுமே பங்கேற்க வேண்டும். குழந்தைகள், மாணவர்களுக்குத் தனித்தனியாகப் பரிசுகள் வழங்கப்படும். வங்கிக் கணக்கில் பரிசுத்தொகை செலுத்தப்படும். படைப்புகளை, கதை: mpmaduraistory@gmail.com. கவிதை: mpmaduraipoem@gmail.com. ஓவியம்: mpmaduraiart@gmail.com ஆகிய மின்னஞ்சலிலும் 88389 04390 என்ற வாட்ஸப் எண்ணிலும் அனுப்பலாம்.
குறும்படம் mpmaduraishortfilm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 94421 11729 என்ற வாட்ஸப் எண்ணிலும், ஸ்டேன்ட் அப் காமெடியை mpmaduraistandup@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 94880 56502 என்ற வாட்ஸப் எண்ணிலும், பெற்றோர்கள் தங்களின் படைப்புகளை mpmaduraiparents@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் அனுப்பலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT