Published : 01 Apr 2020 07:45 AM
Last Updated : 01 Apr 2020 07:45 AM
டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பிய தமிழகத்தில் 259 பேரை கண்டுபிடித்து தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த1,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஊர் திரும்பியுள்ளனர். இதில்பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த பலருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மாநாட்டுக்குசென்று வந்தவர்களை கண்டுபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருவர், செங்கல்பட்டு (22 பேர்), விழுப்புரம் (39), கடலூர் (2), வேலூர் (33), ராணிப்பேட்டை (19), திருவண்ணாமலை (16), திருப்பத்தூர் (22), திருநெல்வேலி, தூத்துக்குடி (23), கன்னியாகுமரி (4), விருதுநகர் (15), திண்டுக்கல் (37), சிவகங்கை (26 பேர்) என மொத்தம் 259 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களின் முகவரிகளை உடனடியாக கண்டறிந்து தனிமைப்படுத்தவும் இவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பதை கண்டறியவும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் தலா ஒருவர் வீதம் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பேரணாம்பட்டு நகரம்
டெல்லியில் மாநாட்டில் பங்கேற்ற வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகரைச் சேர்ந்த 42 வயதுநபருக்கு கரோனா தொற்று அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து வேலூர் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரை தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.
மேலும், அவரது வீட்டில் கடந்தஒரு வாரத்தில் தொடர்பில் இருந்தவேலையாட்கள், உறவினர்கள், நண்பர்கள் யாராவது இருந்தால்18004253686 என்ற கட்டணம் இல்லாத எண்ணுக்கு தொடர்புகொள்ள வேண்டும் என்று நகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பேரணாம்பட்டு நகரில் 3 கி.மீ. சுற்றளவில் உள்ள சுமார் 10 ஆயிரம் வீடுகளில் யாருக்காவது நோய்த் தொற்று இருக்கிறதா என்பதை வீடு வீடாகச் சென்று கண்டறியும் பணியில் 45 குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
கண்காணிப்பில் 67 பேர்
வாலாஜா அரசு மருத்துவமனையில் 11 பேர், வேலூர் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 பேர், வேலூர் பென்ட்லெண்ட் அரசு மருத்துவமனையில் உத்தர பிரதேசம், டெல்லியைச் சேர்ந்த 26 பேர், திருப்பத்தூர் அரசுமருத்துவமனையில் 5 பேர், ஆம்பூர்அரசு மருத்துவமனையில் 10பேர், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் 7 பேர் என மொத்தம் 67 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT