Published : 31 Mar 2020 10:09 AM
Last Updated : 31 Mar 2020 10:09 AM
புதுச்சேரியில் மதுக்கடைகள், சாராயக்கடைகள் வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை மூடியிருக்க கலால் துறை உத்தரவிட்டுள்ளது.
கரோனா அச்சுறுத்தலால் புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்ததால், இன்று (மார்ச் 31) வரை ஊரடங்கு கடந்த மார்ச் 23-ம் தேதி அமலானது. மத்திய அரசு இச்சூழலில் 21 நாட்களுக்கு ஊரடங்கை அமல்படுத்தியது.
புதுச்சேரியில் அரசு உத்தரவின் படி, இன்று வரை மதுபானக் கடைகள் மூடப்பட்டிருக்கும். இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை மத்திய அரசு அறிவிப்பின் படி இருப்பதால், புதுச்சேரியில் அனைத்து வித மதுபானக் கடைகள், சாராயம் மற்றும் கள்ளுக்கடைகளை வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை மூடியிருக்க கலால் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT